மேவலர் - விரும்பிச் சேராதவர்; எதிர்மறை வினையாலணையும் பெயர்;மேவு - பகுதி, அல் - எதிர்மறையிடைநிலை, அர்-பலர்பால் விகுதி. 'ஐந்துவீரருமே' என்பதில், உம்மை - முற்றுப்பொருளது; ஏகாரம் - பிரிநிலை. வீரரும் மேவர எனப்பதம் பிரித்து, வீரர்களுந்தன்னோடு பொருந்திவர என்று உரைக்கவும் இடமுண்டு. இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் புளிமாங்காய்ச்சீரும், மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீராசிரியச்சந்தவிருத்தம்: தானன தனதந்ததானன தானன என்பது, இதற்குச் சந்தக் குழிப்பு. (198) வேறு. 199.-அசுவத்தாமன்துரியோதனனுள்ளவிடஞ் சார்தல். ஆன கமலமலர் வாவியிடை யேமுழுகியாவி யுதவுமறை யோகபர னாகிமொழி, மான கவசவர ராசதுரி யோதனனை வாயுகுமரன்முதிர் போரிலெதிர் வீழும்வகை, தான கரடகரி மாவையரிமாபொருத தாய மெனவுழறி னானெனுமுன் வேதமுனி, ஞானசரிதகுரு வாகியது ரோணன்மக னாடுகளமணுகி னானொருவிநாழிகையில். |
(இ -ள்.) ஆன அழகியவையான, கமலம்-தாமரைகள், மலர் மலரப்பெற்ற, வாவியிடையே - தடாகத்திலே, முழுகி -, யோக பரன்ஆகி- யோகப்பயிற்சியில் ஊன்றியவனாய், ஆவி உதவு மறை - (இறந்தவர்க்கு மீண்டும்) உயிரைத்தருகிற சஞ்சீவிநிமந்திரத்தை, மொழி - ஜபித்த, மான கவசவரராச துரியோதனனை - மானத்தையே (தன்னைப்பாதுகாக்குங்) கவசமாகக்கருதுகிற சிறந்த அரசனாகிய துரியோதனனை, முதிர் போரில் - மிக்கபோரிலே,எதிர் வீழும் வகை - எதிரில் வீழ்ந்திடும்படி, தான கரடம் கரிமாவை அரிமாபொருத தாயம் என - மதசலத்தையுடைய கன்னங்களையுடைய யானையைச்சிங்கம் எதிர்த்தழித்தவகைபோல, வாயு குமரன் - வீமன், உழறினான் -கலக்கினான், எனும் முன் - என்று (சிலர்) சொல்லுமுன்னே,-வேதம் முனி ஞானசரித குரு ஆகிய துரோணன் மகன் - வேதம் வல்ல முனிவனும்தத்துவஞானத்தையும் நல்லொழுக்கத்தையுமுடைய வில்லாசிரியனுமானதுரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், ஒரு விநாழிகையில் -ஒருவிநாழிகைப் பொழுதிலே, நாடு களம் அணுகினான் - ஆராய்ந்துகுறிக்கப்பட்ட அப்போர்க்களத்தை யடைந்தான்;
சிங்கம் வீமனுக்கும், யானை துரியோதனனுக்கும் உவமை; எளிதில் அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய இயல்பை விளக்கும். துரியோதனன் நிலைமையைக் கேட்டவுடனே சிறிதுங்கால தாமதஞ் செய்யாமல் ஓடிவந்து அவ்விடஞ் சேர்ந்தன னென்பதை அக்கிரமாதிசயோக்தி [முறையிலுயர்வுநவிற்சி] யலங்காரவகையால், 'உழறினானெனுமுன் நாடுகளம் அணுகினான்' என்றார். இப்பொழுது போர் செய்தற்குரிய இடம் யாதென்று துரியோதனன் வினாவக் கண்ணன் ஆராய்ந்து கூறிய சிறந்த இடமாதலின், சியமந்தபஞ்சகம் 'நாடுகளம் |