பார்த்தபின் மோதிரத்தை வாங்கிக் கொண்டான்; இதனால், பிறன் கைம்மோதிரத்தைத் தான் வாங்கிப் பூமியைத்தொட்டு ஆகாயத்தை நோக்கிச் சூரியன் சாட்சியாகச் செய்துகொடுப்பதாகிய ஒரு பிரதிஜ்ஞையை அசுவத்தாமன்கண்ணனுக்குச் செய்துகொடுத்ததாகப் பார்ப்பவர்க்குத் தோன்றிற்று; அதனால்,துரியோதனாதியர் யாவர்க்கும் அசுவத்தாமனிடத்தில் நம்பிக்கை போய்விட்டது. இங்ஙனம் கண்ணன் அப்பொழுது செய்த சூழ்ச்சியைக் குறித்து இங்குஅசுவத்தாமன் 'நீ தலைநாளினில் எனைத்தனிதெளிந்திலை யாதவன்மாயையின்' என்றான். "தனிவந் தகலுந் தூதனைப் போய்த் தானே யணுகித்தடஞ்சாப, முனிவன் புதல்வன் மோதிரந் தொட்டருஞ்சூள்முன்னர்மொழிகின்றா, னினிவந் துறவாய்நின்றாலு மெங்ஙன் தெளிவதிவனையெனத், துனிவந் தரசர்முகநோக்கிச் சொன்னா னிடியேறன்னானே"என்ற கிருட்டிணன் தூதுசருக்கத்துச் செய்யுள் இங்கே காணத்தக்கது. நீஎன்னிடத்து நம்பிக்கைகொண்டு என்னைச் சேனாதிபதியாக்கியிருந்தால் நான்எனது திறமைமுழுதையுங் காட்டி மிக்க ஊக்கத்தோடு பெரும்போர்செய்துயாவரையும் அழித்து அரசாட்சி முழுவதையும் உனக்கேநிலைநிறுத்தியிருப்பேன் என்று கூறினான். பரிவு - கழிவிரக்கமுமாம். முதலடியால், துரியோதனனது தீராப்பகைமையும் அடங்காத்துணிவும் விளங்கும். சராஸநம் - சர அஸநமெனப் பிரிந்து அம்புகளைத்தள்ளுவதென்றும், சரஆஸந மெனப் பிரிந்து அம்புகளுக்கு இடமாவதென்றுங் காரணப் பொருள்படும். தழீஇனன் - தழுவினன் என்பதன் அளபெடை; சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால், இது சொல்லிசையளபெடை. இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும், மற்றையாறும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீராசிரியச்சந்தவிருத்தம். தனத்தனன தந்தன தானன தானன தனத்தனனதந்தன தானன தானன - என்பது இதற்குச் சந்தக்குழிப்பாம். (201) வேறு. 202. | அருளுற வழக்கழி வுறாததோர்மாற்றமு மறனுட னழுக்கா றணுகுறா வேற்றமும், இருநில மதித்திட வினிதுகோ லோச்சுதலியல் புநிருபர்க்கெனு முறைமையோ பார்த்திலை, நரைகெழுமுடித்தலை யென்பிதா மீப்படு நதிமகன் முறித்த வில் விதுரனேபோற்பல, குரவரு முரைத்தசொ லுறுதிநீ கேட்டிலை குருமர பினுக்கொரு திலகமா மூர்த்தியே. |
(இ -ள்.) குரு மரபினுக்கு - குருகுலத்துக்கு, ஒரு திலகம் ஆம் - ஒரு திலகம்போல அழகுசெய்துசிறக்கிற, மூர்த்தியே - பெருமையுடையவனே! அருள் உற - கருணை பொருந்த, வழக்கு அழிவு உறாதது - இராசநீதி அழியப்பெறாததான, ஓர் மாற்றமும் - ஒப்பற்ற சொல்லையும், அறனுடன் - தருமத்தோடுகூடி, அழுக்காறு அணுகுறா- |