சதைகளையும்வெளிச்சிந்தும்படி இணை கரு சிறு குறு கரத்தால் - கரிய சிறுத்த குள்ளமான (தனது) இரண்டு கைகளாலும், வல் புகை எழும் ஆறு - (உக்கிரத்தால்) மிக்க புகை கிளம்பும்படி, உள் உற மலைந்து - ஊக்கத்தோடு எதிர்த்துப்போர்செய்து, மற்று உளோர் கொற்றமும் அழித்து - மற்றையிருவருடைய திறமையையும் அழியச்செய்து, பின் புகல்அறும் ஆ துரந்தது - பின்பு உட்செல்லுதலொழியும்படி துரத்திவிட்டது; அ பூதம் பெருமையாம் பேசுறும் தகைத்தோ - அந்தப்பூதத்தினது மகிமை நாம் சொல்லக்கூடியதன்மையையுடையதோ? [அன்றென்றபடி]; (எ - று.)
'அப்பூதப்பெருமை யாம் பேசுறுந் தகைத்தோ' என்றது, கவிக்கூற்று; பூதமாதலின், 'கருஞ்சிறுகுறுங்கரம்' என்றார். 'முரணும்' என்ற பாடத்துக்கு- வலிமையுமென்க. அசவத்தாமன் தலைமையான வீரனென்பது தோன்ற, அவனுக்கு 'விசயம்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. (207) 4.-மூவரும் மீண்டு ஆலமரத்தினடியிற் சேர்தல். மாதவன்விதியாலகன்பெரும்பாடிமாநகர்காவல்கொண்டுற்ற பூதமேபொருதுதுரத்தலின் மீண்டுபோய்வடதருநிழற்புகுந்து பேதுறவெருவோடிருந்தனர் கரியபெரியவக்கங்குலிற்றுரோண சாதனன்மதலையென்செய்துமென்னத்தன்மனத்தெத்தனை நினைந்தான். |
(இ -ள்.) மாதவன் விதியால் - கண்ணபிரானது கட்டளையால், அகல் பெரு பாடி மா நகர் காவல் கொண்டு உற்ற - பரந்த பெரிய சிறந்த படைவீட்டைக் காவல்செய்யுந்தொழிலை ஏற்றுக்கொண்டு பொருந்திய, பூதமே -பூதந்தானே, பொருது துரத்தலின் - போர்செய்து துரத்திவிட்டதனால்,(அம்மூவரும்), மீண்டு போய் திரும்பிச் சென்று, வட தரு நிழல் புகுந்து -ஆலமரத்தின்நிழலிலே சேர்ந்து, பேது உற - மனக்கலக்கமுண்டாக,வெருவோடு - அச்சத்தோடு, இருந்தனர் - இருந்தார்கள்; கரிய பெரிய அகங்குலில் - (இருளினாற்) கருமைநிறமுடைய பெரிய அவ்விராத்திரிகாலத்திலே,துரோணசாதனன் மதலை - துரோணாசாரியனது குமாரனான அசுவத்தாமன்,என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் - 'இனி என்னசெய்வோம்' என்று தன்மனத்தில் எவ்வளவோ நினைத்தான் [மிகப்பலவாறுசிந்தித்தனன்]; (எ - று.) மாதவனென்ற பெயர் - மா - இலக்குமிக்கு, தவன் - கணவன் என்று பொருள்படும். காவல் - தொழிற்பெயர். ஸாதநம் - பயிற்சி: கல்விப்பயிற்சி செய்விப்பவனாதலால், சாதனனென்று ஆசிரியனுக்குப்பெயர்: அன்றி, எத்தொழிலையும் நினைத்தபடி சாதிக்கவல்லானென்னும் பொருளதுமாம். (208) 5.-அசுவத்தாமனது சிந்தை. எஞ்சினநிருபனுயிரினைநிறுத்தியிவ்விரவகல்வதன்முன்னர் வெஞ்சினமுறச்சென்றுன்பகைமுடித்துமீளுதுமெனப்பலபடியும் |
|