பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்167

வரி சிலைதிட்டத்துய்மனை - கட்டமைந்த வில்லையுடைய த்ருஷ்டத்யும்
நனை,மணி தலை துணித்தான் - அழகிய தலையை அறுத்திட்டான். (எ-று.)

     தனதுதந்தையான துரோணனைக் கொன்றவனாகிய திட்டத்துய்மன்
மேல்அசுவத்தாமன் கறுக்கொண்டு அவனைத்தூங்கிக் கொண்டிருக்கையில்
முதலில்தலை துணித்துப் பழிதீர்த்துக்கொண்டனன் என்பதாம். 
படைவீட்டினுள்ளேயுள்ளவர்கள் வெளிச்சென்று தப்பிஉய்ந்து போகாத
வண்ணம்தடுத்தற்பொருட்டு இருவரையும் வாயிலிற் காவலாகநிறுத்தினனென்க. 
தாமரைமலர்மாலை அந்தணர்க்கு உரியதாதலால், 'கமலமாலையான்' என்றார்;
இனி,தாமரை மணிமாலையுமாம்.  கடப்பமலர்மாலை முருகனுக்கு
அடையாளப்பூமாலை யாதலால், அவனுக்கு 'கடம்பன்' என்று ஒருபெயர்
வழங்கும்.                                               (213)

10.-அதனையறிந்து பாஞ்சாலர்பலர் அசுவத்தாமனை
யெதிர்த்தல்.

கயில்புரிகழற்காற்றந்தையைச்செற்றகாளையைப்
                                 பாளையத்திடையே,
துயில்புரியமையத்திமைக்குமுன்சென்னிதுணித்தனன்சுதனெனக்
                                          கலங்கி,
வெயில்புரிவதன்முன்வல்லிருளிடையேயுணர்ந்தவர்
                                 வெருவுடனரற்றப்,
பயில்புரிசிலைக்கைச்சிகண்டியைமுதலோர் பலரும்
                            வந்தனர்கள் பாஞ்சாலர்.

     (இ -ள்.) கயில் புரி - கயிலென்னும் உறுப்பு அமைந்த, கழல் -
வீரக்கழலையணிந்த, கால் - பாதத்தையுடைய, தந்தையை - தனது
தந்தையானதுரோணனை, செற்ற - கொன்ற, காளையை - இளவீரனான
திட்டத்துய்மனை,பாளையத்து இடையே - படைவீட்டினுள்ளே, துயில் புரி
அமையத்து -தூக்கங்கொண்டிருக்குஞ் சமயத்தில், இமைக்கு முன் -
நொடிப்பொழுதினுள்,சுதன் - துரோணபுத்தினான அசுவத்தாமன், சென்னி
துணித்தனன் -தலையறுத்திட்டான், என - என்று அறிந்து, கலங்கி -
மனங்கலங்கி,வெயில்புரிவதன் முன் வல் இருளிடைய உணர்ந்தவர் -
சூரியனுதிப்பதன்முன்வலிய இருட்பொழுதிலேயே தூக்கம்விழித்துள்ளவர்கள்,
வெருவுடன் -அச்சத்தோடு, அரற்ற - கதறியொலிக்க, - பயில் புரி சிலை
சிகண்டியைமுதலோர் - பழகுதல் பொருந்திய வில்லையேந்திய
கையையுடைய சிகண்டிமுதலானவர்களான, பாஞ்சாலர் பலரும் - பாஞ்சால
தேசத்து அரசர்கள்பலரும், வந்தனர்கள் - (அவனையெதிர்த்து) வந்தார்கள்;
                                                      (எ - று.)

    இயல்பாக நடுராத்திரியில் தூக்கம்விழித்துள்ளவர்கள் சிலர்
அசுவத்தாமன்திட்டத்துய்மனைத் தலை துணித்ததைக்கண்டு நிலைகுலைந்து
அஞ்சிஆரவாரஞ்செய்ய, அத்திட்டத்துய்மனது உடன் பிறந்தவரான சிகண்டி
முதலியபாஞ்சாலதேசத்து வீரர்கள் அநேகர் அசுவத்தாமனை வந்து
எதிர்த்தார்கள்என்பதாம்.  கயில் - ஆபரணக்கடைப்புணர்வு. 
வெயில்புரிவதன் முன் -வெயில்புறப்படுவதன்முன் என்றபடி.  சிகண்டி -
துருபதனது குமாரரில்ஒருவன்; தன் தம்பிக்கு மணஞ் செய்விக்கும்பொருட்டுக்
காசிராசன் மகளிர்