சென்னி யென்று சிறுவர்தஞ்சென்னியை முன்னர் வைத்தன னான்முனிமைந்தனே. |
(இ -ள்.) சொன்ன சிங்கம் துவசனை ஆதி ஆ - (யாவராலுஞ் சிறப்பித்துக்) கூறப்பட்ட சிங்கக்கொடியையுடைய வீமனை முதலாகவுள்ள, மன்னர் ஐவரும் - பாண்டவராசர்கள் ஐந்துபேரும், மாண்டனர் - இறந்தொழிந்தார்கள்; அவர் சென்னி - அவர்களுடைய தலைகளாகும் (இவை),என்று - என்று சொல்லி, முனி மைந்தன் - துரோணபுத்திரனான அசுவத்தாமன், சிறுவர்தம் சென்னியை - அவர்கள் குமாரர்களுடைய தலைகளை, முன்னர் வைத்தனன் - துரியோதனனெதிரிலே வைத்தான்; (எ -று.)-மற்று, ஆல் - அசைகள். சொன்ன - உனக்குப் பழம்பகைவ னென்று சொல்லப்பட்ட எனினுமாம். (223) 20.-துரியோதனன் அவற்றைநோக்கிப் பாண்டவர் தலைகளல்ல எனல். வைத்தசென்னியை நோக்கி வயாவுறு சித்தமன்னவன் றேறிச் சிறார்முகம் தத்தமன்புடைத் தந்தையர் வாண்முகம் ஒத்தவாகுமிஃ துண்மையென் றோதினான். |
(இ -ள்.) வயா உறு சித்தம் - ஆசைமிக்க மனத்தையுடைய, மன்னவன்- துரியோதனன், தேறி - (அசுவத்தாமன் வார்த்தையைக் கேட்டவுடனே சிறிது)தேறுதலடைந்து, வைத்த சென்னியை நோக்கி - (அவன் தன் எதிரிலே)வைத்த தலைகளைப் பார்த்து, (உடனே அவனை நோக்கி), சிறார் முகம் -(இவை அப்பாண்டவர்களுடைய) புத்திரர்களின்முகங்களே; தத்தம் அன்புஉடை தந்தையர் வாள் முகம் ஒத்த ஆகும் - தந்தமது அன்புள்ளதகப்பன்மார்களது ஒளியுள்ள முகங்களைப் போன்றுள்ளனவாம்; இஃதுஉண்மை - இது மெய், என்று ஓதினான் - என்று சொன்னான்; (எ - று.) துரியோதனன் உயிர்போகுமளவும் தனியரசாட்சிச் செய்வதில் மிக்க விருப்பங் கொண்டிருந்தமையும், அப்படி தணியாத பேராசையுடையவன் அசுவத்தாமன் வார்த்தையைக்கேட்டு மரணவேதனையிலுஞ்சிறிது தேறுதலடைந்தமையுந் தோன்ற, 'வயாவுறுசித்த மன்னவன் தேறி' என்றார். (224) 21.-இதுமுதல் ஐந்து கவிகள் -துரியோதனன் இரங்கல். ஓதும் வேந்துக் கொருமொழியுஞ்சொலான் வேத பண்டித னிற்கவவ்வீரனைப் பாதகஞ் செய்கை பார்ப்பனமாக்களுக் கேதமேதமிதென்செய்தவாறெனா. |
|