எங்களுக்கும், அவர்க்கும் - (பாண்டுகுமாரராகிய) அவர்களுக்கும், ஒரு குலத்தினும் - ஒருவமிசத்திலும், இங்கு - இம்மையில் [இவ்வுலகத்தில்], உண்டுஎன - அடையாளமுண்டென்று சொல்லும்படி, இல்லை - (சந்ததி) இல்லையாயிற்று; வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே - பிறந்து வளர்ந்த குலத்திலே ஒருகுற்றமுமில்லாத குமாரனே! குருகுலத்தின் கொழுந்தினை - குருவமிசத்தின் இளமூளையை, கிள்ளினை - கிள்ளிவிட்டாயே; (எ - று.) 'மாசறுமைந்தனே' என்ற விளி, மாசுறுஞ் செயலைச் செய்யலாமோ என்றகுறிப்பினது. குருகுலமே அடியோடு அழிவதுகுறித்து வருந்தியமை இங்குவெளியாம். 'குருகுலத்தின்கொழுந்து' என்றது, உபபாண்டவரை. 'வருகுலம்'எனப்பட்டது, துரோணனது பரத்துவாசகுலம். 'மைந்தனீ' என்றும் பாடம். (227) 24. | ஆற்றினீர்விளையாடியநாண்முதல் காற்றின்மைந்தனொடெத்தனைகன்றினேன் சாற்றினென்வினைதானென்னையேசுடக் கூற்றின்வாய்ப்புகுந்தேற்கென்னகூற்றையா. |
(இ -ள்.) ஐயா - ஐயனே! ஆற்றின் நீர் விளையாடிய நாள் முதல் - கங்காநதியின் சலத்திலே விளையாடின நாள் முதற்கொண்டு, காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன் - வாயுகுமாரனான வீமனுடன் எவ்வளவு வயிரங்கொண்டேன்! சாற்றின் - ஆராய்ந்து கூறுமிடத்து, என் வினைதான் என்னையே சுட - யான்செய்த தீவினையே என்னை வருத்த, கூற்றின்வாய் புகுந்தேற்கு - யமனுடைய வாயில் நுழைந்திட்ட எனக்கு, என்ன கூற்று - (சொல்லத்தக்க) வார்த்தை என்ன இருக்கிறது? (எ - று.) துரியோதனாதியரும் பாண்டவரும் இளம்பிராயத்தில் ஒருநாள் கங்கையில்நீர்விளையாடி அதன்துறையில் ஒருசார் இன்னுணவுண்டு களித்துக் கண்டுயில,அவ்விரவில் துரியோதனன் வீமனைக் கொல்லும்பொருட்டுச் சகுனிமுதலானாரோடு ஆலோசித்து அவனை வலியகயிறுகளாற் கைகால்களைக்கட்டி அப்பெருநதியில் எறிந்து விட்டதும், அதில் விழுந்து துயிலுணர்ந்தவீமன் தன் உடல் வலிமையால் அக்கட்டுக்களைத் துணித்துக் கொண்டுகரையேறிப் பிழைத்ததனை யறிந்து மற்றொருநாள் கங்கைத்துறையில் எஃகினாலும் இரும்பினாலும் செம்மரத்தாலும் கூரிய பலகழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி நாட்டச்செய்து வீமனை 'நீரில் விளையாட வா' என்று வஞ்சனையாக அழைத்துப் போய் 'இங்கிருந்து நீ நீரில் குதிக்கின்றாயா, பார்ப்போம்' என்று சொல்லி அவனை அதிற் குதிக்கும்படி தூண்டியதும், அப்பொழுது கண்ணன் கருவண்டின் உருவங்கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க, வீமன் அதனை நோக்கி 'இது என்ன? நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே' என்று உற்றுப்பார்க்கும்போது மூன்று அங்குலத்தின்கீழ் வசிகள் நாட்டியிருக்கக்கண்டு தன்சங்கேதப்படி அவை நாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டிட, அதுகண்டு துரியோதனன் வேறொருநாள் வீமனுக்கு விருந்து செய்விக்கிற வியாசமாகச் சமையற் |