பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்177

காரரைக்கொண்டு விஷங்கொடுத்து உண்பித்து அதனால் மயங்கிய
அவனைக்கட்டிக் கங்கையிற் போகட, அவன் பாதாளஞ்சேர்ந்து நாகங்களின்
உதவியாற் பிழைத்து மீண்டமையும் ஆகிய இளம்பிராயத்துச்செய்திகளைக்
கருதிக் கழிவிரக்கங்கொண்டு, துரியோதனன், 'ஆற்றினீர்விளையாடிய
நாள்முதல்,காற்றின்மைந்தனொ டெத்தனை கன்றினேன்' என்றான்.  (228)

25.

பணை நெடுங்கைப்பகட்டுவெஞ் சேனைசூழ்
இணை தருஞ்சொற்கிளைஞர்கள் யாரையுந்
துணைவர் யாரையுந்தோற்று நின்றேனெனக்கு
இணையர் பார்மிசையாருள ரெண்ணிலே.

     (இ -ள்.) பணை - பருத்த, நெடு - நீண்ட, கை -
துதிக்கையையுடைய,பகடு - ஆண்யானைகளையுடைய, வெம் - கொடிய,
சேனை - சேனைகள்,சூழ் - சூழப்பட்ட, இணைதரும் சொல் - பொருந்திய
புகழையுடைய,கிளைஞர்கள் யாரையும் - உறவினர்களெல்லோரையும்,
துணைவர் யாரையும் -நண்பர்களெல்லோரையும், தோற்று நின்றேன் -
(போரில்) இழந்து நின்றேன்,(யான்); எண்ணில் - ஆலோசிக்குமிடத்து,
பார்மிசை - பூமியில், எனக்குஇணையர் யார் உளர் - எனக்கு ஒப்பானவர்
எவர் இருக்கின்றார்?[யாருமில்லை]; (எ - று.)

     பகடு -யானையின் ஆண்பாற்பெயர்.  இணைதரும், தா - துணை
வினை.  சொல் - புகழாதலை "சொன்மாண்பமைந்த குழு" எனச்
சிந்தாமணியிலுங் காண்க.  இனி, 'இணைதருஞ்சொல்' என்பதற்கு - எனக்கு
அனுகூலமாக இணங்கிப்பேசும் பேச்சையுடையஎன்றும் உரைக்கலாம்;
'கிணைதருஞ்சொல்' என்ற பாடத்துக்கு - முரசவாத்தியத்தின் ஒலியை
யொத்துக் கம்பீரமாக ஒலிக்கிற சொற்களையுடைய என்க.  துணைவர் -
தம்பிமாருமாம்.                                           (229)

26.-துரியோதனன்அசுவத்தாமனுக்கு விடைகொடுத்து
அனுப்புதல்.

என்றுபன்மொழிகூறியிம்மைந்தரைக்
கொன்றுவந்தகுமரனைப்போர்தொறும்
நின்றதீவினைநீங்கிடநீதவம்
ஒன்றிவாழ்கென்றுயர்விடைநல்கினான்.

     (இ -ள்.) என்று பல்மொழி கூறி - என்று இவ்வாறு பல
வார்த்தைகளைச் சொல்லி, இ மைந்தரை கொன்று வந்த குமரனை -
இப்பிள்ளைகளை [உப பாண்டவரை] வதைத்துவந்த துரோணகுமாரனான
அசவத்தாமனை, (நோக்கி), 'போர் தொறும் நின்ற தீவினை நீங்கிட -
போர்களில் நின்றதனாலாகிய பாவம் நீங்கும்படி, நீ தவம் ஒன்றி வாழ்க -
நீதவத்திற்பொருந்தி வாழ்வாயாக,' என்று - என்று சொல்லி, உயர் விடை
நல்கினான் - சிறந்த அனுமதியை (அவனுக்குக்) கொடுத்து அனுப்பினான்;
                                                    (எ -று.)

    அரசர்க்குப்போல அந்தணர்க்குப் படைக்கல மேந்திப் போர்செய்தலும்,
அதில் பற்பலரையழித்தலும் சாதிதருமமல்லவாதலால்