இனியவையுமானவார்த்தைகள். பின்னிரண்டடி - விசேஷஞானமுடைய தேவர்களும் உன்னைப்போலப்பேசுவதில் தேர்ந்தவர்களல்லரென்று கொண்டாடியவாறு. (232) 29. | யானுமெம்பியருமிறந்தோமெனும் மானபங்கமறந்துதன்னெஞ்சினுக்கு ஆனதம்பியளித்தவர்தம்மொடும் கோனிலம்புரக்கும்படிகூறுவாய். |
(இ -ள்.) 'யானும் - நானும், எம்பியரும் - (எனது) தம்பிமார்களும், இறந்தோம் - இறந்துவிட்டோம்', எனும் - என்ற காரணத்தாலாகிய, மானபங்கம்- அவமானத்தை, மறந்து -, தன் நெஞ்சினுக்கு ஆன தம்பி அளித்தவர்தம்மொடும் - தனது மனத்துக்குப் பிரியனாயிருந்த தம்பியான பாண்டுவினாற்பெறப்பட்ட தருமன் முதலியோருடனே, கோல் நிலம் புரக்கும்படி -செங்கோல்கொண்டு இராச்சியம் ஆளும்படி, கூறுவாய் - (திருதராட்டிரனுக்குநீ) சொல்லியருள்வாய்;
'தன்நெஞ்சினுக்கான தம்பி' என்றதனால், திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் இருந்த ஒற்றுமை விளங்கும். (233) 30.-சஞ்சயனையனுப்பிவிட்டுத்துரியோதனன் உயிர்நீத்தல். என்னவம்முனிதன்னிணைத்தாண்மலர் சென்னிமீதும்விழியினுஞ்சேர்த்திடா உன்னிலாண்மைக்குவமையில்லாதவன் பொன்னிலத்தினுணர்வொடும்போயினான். |
(இ -ள்.) உன்னில் - ஆலோசிக்குமிடத்து, ஆண்மைக்கு உவமை இல்லாதவன் - பராக்கிரமத்தில் (தனக்கு) ஒப்பில்லாதவனான துரியோதனன்,- என்ன - என்று சொல்லி, அ முனிதன் - அந்தச் சஞ்சயமுனிவனது, இணை தாள் மலர் - தாமரை மலர்போன்ற உபயபாதங்களை, சென்னிமீதும் விழியினும்சேர்த்திடா - (தனது) தலையின் மேலும் கண்களிலுங் கொண்டு [தனது முடிஅவனடியிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அவனதுபாதங்களைத் தனது கண்களில் ஒற்றிக்கொண்டு], (பின்பு), உணர்வொடும் -நல்லறிவுடனே, பொன் நிலத்தின் போயினான் - பொன்மயமானவீரசுவர்க்கத்திற்சென்றான் [இறந்தான் என்றபடி];(எ-று.)(234) வேறு. 31.-துரியோதனனது மரணம். வயிரஞ் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொருபடைவினையுமேல்வரு, செயிருந் திகழ்தரு குலம கீபதி திறல்வெஞ் செருமுனை யதனின்மேதகும், அயிர் நுண் குழலர மடநல் லார்பல ரளிகொண் டெதிர்கொள வமரனானபின், உயிர்கொண் டதுசுர ருறையும் வானுல குடல்கொண் டதுதன துடைய பூமியே. |
|