பக்கம் எண் :

180பாரதம்சௌப்திக பருவம்

     (இ -ள்.) வயிரம் செறிதரு - தீராப்பகைமை பொருந்திய, மனனும் -
எண்ணமும், வாய்மையும் - (அதற்கு ஏற்ற) சொற்களும், வலியும் - பலமும்,
பொரு படை வினையும் - போர்செய்தற்கு உரிய ஆயுதங்களின் தொழிலும்,
மேல் வரு செயிரும் - மேன்மேற் பொங்கிவருகிற கோபமும், திகழ்தரு -
விளங்கப்பெற்றுள்ள, குலமகீபதி (குருவென்னும் அரசனது சிறந்த) குலத்திற்
பிறந்த அரசனான துரியோதனன், திறல் வெம் செரு முனையதனில் - பல
பராக்கிரமங்களுக்கு உரிய கொடிய போர்க்களத்தில், மேதகும் அயிர்
நுண்குழல் அர மட நல்லார் பலர் அளிகொண்டு எதிர் கொள - மேன்மை
பொருந்திய நுண்மணல்போல மெல்லியனவாயுள்ள கூந்தலையுடைய
மடமைக்குணமுள்ள தேவமாதர்கள் பலர் அன்புகொண்டு எதிர்கொண்டு
உபசரிக்க, அமரன் ஆன பின் - (இறந்து) தேவனானவுடன், உயிர் -
(அவனுடைய) உயிர், சுரர் உறையும் வான் உலகு கொண்டது - தேவர்கள்
வசிக்கும் சுவர்க்கலோகத்தைச் சேர்ந்தது; உடல் - அவனுடம்பு,
தனதுஉடையபூமியே - அவனுக்கு உரியதாயிருந்த நிலவுலகத்தை,
கொண்டது -சேர்ந்தது; (எ - று.)

    நித்தியமாய் என்றும் அழியாததான உயிரை வேற்றுலகங்கொள்ள
அவனுக்கு வெகுநாளாய்ச் சொந்தமாயிருந்த இவ்வுலகம் நிலையற்றதும்
பயனில்லாததுமான உடம்பை மாத்திரமே கொண்டதென்க.  உயிர்
வீரசுவர்க்கஞ் செல்ல, உடல் கீழ்க்கிடந்திட்டது என்றபடி.  உயிரை
வானுலகம்கொண்டது, உடலைப்பூமிகொண்டது என்று பதவுரை கூறினுமாம்.
'வயிரஞ்செறிதரு' என்ற அடைமொழியை வாய்மைக்குக் கூட்டுக.
வாய்மையென்பதற்கு - சத்தியமென்று உரைத்தல், இங்குப் பொருந்தாது,
துரியோதனன் பொய்யனாதலால், வலி - தேகபலம் ஆயுதபலம் சேனாபலம்
புத்திபலம் மனோபலம் முதலியன, அயிர்க்குழல் - உவமைத்தொகை.

    இச்செய்யுள் - ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும்
இரண்டு ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், நான்குஎட்டாஞ்சீர்கள்
கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.

     தனதந்தனனன தனன தானன தனதந் தனனன தனன தானன -
என்பது இதற்குச் சந்தக்குழிப்பு.  'குருகுலமகிபதி' என்றும் பாடம்.  (235)

வேறு.

32.-இதுவும் அது.

கிடந்தவுடல் வானவர்தங்கிளைசொரிந்த பூமழையாற்
                            கெழுமுற்றோங்க,
நடந்தவுயிர் புத்தேளி ரரமகளிர் விழிமலரானலனுற் றோங்க,
அடர்ந்தகளிகண் மொகுமொகெனு மாமோதவலம்புரித்தா
                                 ரண்ணல் யாரும்,
மிடைந்துமிடைந் தெதிர்கொள்ளவீரருறை பேருலக
                                    மேவினானே.