திருதராட்டிரனது மிக்கவலிமையையும், அதிகவைரத்தையும், கோபாவேசத்தையும் வியந்தார். "கராசலம் பதினாயிரம் பெறுவலிக்காயமொன்றினிற் பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும் விழிப்புலனில்லை மற்றதற் கென்றான்" என்றபடி திருதராட்டிரன் பதினாயிரம் யானைபலங்கொண்டவ னாதலாலும், கோபாவேசத்தாலும், இருப்புத் தூணைத் தழுவி நெரிப்பவனானான். பாண்டவர் கண்ணனுடன் திருதராட்டிரனைச் சேர்ந்து வணங்கியபொழுது, தன்புத்திரரைக் கொன்ற அவர்களிடத்து உள்வயிரமுடைய திருதராட்டிரன் அவர்களை அன்போடு தழுவுவான்போல அருகிலழைத்து முதலில் தருமபுத்திரனையணைத்து நல்வார்த்தை கூறிவிட்டு உடனே வீமனைக் கொல்லுங்கருத்தோடு அவனை அழைக்க, அப்பொழுது முழுதுணர்கடவுளான கண்ணன் அவனுடைய உட்கருத்தை யறிந்து வீமனைத் தடுத்து வீமன்வடிவமுடையதோர் இரும்புமயமானபிரதிமையைக்கொணர்ந்து செலுத்த, திருதராட்டிரன் அதனை வீமனென்றே கருதிவலியத்தழுவியதனால், அந்த இருப்புருவம் பொடிப்பொடியாய்விட, பின்பு திருதராட்டிரன் கண்ணனால்உண்மைகூறி நல்லறிவு புகட்டப்பட்டவுடன் கோபசாந்தியையடைந்து பிறகுவீமன் முதலிய நால்வரையுந்தழுவினனென விவர முணர்க. துரியோதனன்வீமனிடத்துள்ள விரோதத்தால் தனது மாளிகை வாயிலில் அவன் போன்ற ஒருஇருப்புப்பாவையை அமைத்து நிறுத்தி அதனைப்பலவாறு விகாரமாகஅலங்கரித்து அதன் தலையின்மேல் தான் உபரிகையினின்று எச்சிலுமிழ்ந்துஇங்ஙனம் தன்பகைமையையுங் கொடுமையையும் வெளிக்காட்டிவந்தனனென்றும், அந்தப்பிரதிமையே இங்குக்கண்ணனாற் கொணர்ந்துகொடுக்கப்பட்டதென்றும் அறிக: ஆனது பற்றியே, 'அத்தூண்' எனச் சுட்டிக்கூறினார். தூண் - தூண்போல நீண்ட பெரியவடிவமென்க. "முன்னர்மேவுமா றுணர்ந்தமூலகாரணன்பகுத், தன்ன வீமனுக்கு வேறமைத்தபஞ்சலோகமொன், றுன்னு முன்னர் கொணருவித் துடனடந்து நேர்புக" என்றுநல்லாப்பிள்ளை பாரதத்துக் கூறியவாறும் உணர்க. ஹஸ்தினாபுரி - ஹஸ்தீ என்ற சந்திரகுலத்தரசனால் அமைக்கப்பட்ட நகர மென்றும், யானைகளை மிகுதியாகவுடைய நகர மென்றும் காரணப் பொருள்படும். ஹஸ்தம் - கை, இங்கே துதிக்கை; அதனையுடையது ஹஸ்தீ என யானைக்குக் காரணக்குறி. தான் கொண்ட மனுஷ்யாவதாரத்துக்கு ஏற்ப, கண்ணனும் பாண்டவருடன் திருதராட்டிரனை அன்போடு வணங்குபவனானான். வித்தகன் - தந்திரம் வல்லவன்; வஞ்சக னென்றபடி. அதிக பலபராக்கிரமசாலிகளான தன்மக்கள் நூற்றுவரையுந் தனியேயழித் திட்டவலிமையைக்கொண்டாடுவான் போன்று, திருதராட்டிரன், வீமனை 'சதாகதிசேய்' என்றான். வேண்டும் - உம்விகுதிபெற்ற ஒருவகை வியங்கோள். (249) 46.-கண்ணன் தருமனுக்குஅரசளித்துத் துவாரகை சேர்தல். இனியூழிவாழ்திரெனவிளைஞரொருநால்வருடனறத்தின்மைந்தன், தனையிருத்திமீள்வலெனச்சாத்தகியுமலாயுதனுந்தன்னைச்சூழ, வினைய கற்றும்பசுந்துளவோன்றுவரைநகர்த்திசைநோக்கி மீண்டான்சீர்த்திக், கனைகடற்பாரளித்தவரு மந்நகரினறநெறியேகருதி வாழ்ந்தார். |
|