(இ -ள்.) வில்லியரில் - வில்வீரர்களிலும், வேலாளில் - வேல்வீரர்களிலும், வாள் எடுத்தோர்தம்மில் - வாள்வீரர்களிலும், ஒரு வேந்தர்- ஓரரசரும், ஒவ்வார் - (சல்லியனுக்கு) ஒப்பாகமாட்டார்: வேறு - மற்றும்,செல் இயல் - (அழகிதாகச்) செல்லுந்தன்மையுள்ள, வெம்வேகத்தையுடைய, பரி- குதிரைமேலேறிய, ஆளில் - வீரர்களிலும், கரி ஆளில் - யானை வீர்களிலும்,தேர் ஆளில் - தேர்வீரர்களிலும், சிலர் ஒவ்வார் - எவரும் (அவனுக்கு)ஒப்பாகமாட்டார்: மல் இயல் - பலம் பொருந்தின, பொன்-அழகிய, தோள்-புயங்களின், வலிக்கும்-வலிமையாலும், தண்டுக்கும்-கதாயுதத்தாலும், எதிர்ந்துபொர வல்லார் - (சல்லியனை) எதிர்த்துப் போர்செய்யவல்லவர், யாரே - எவர்உள்ளார்? [எவருமில்லை யென்றபடி]; சல்லியனுக்கு ஒப்பார் - சல்லியனுக்குச்சமானமானவர், நின்தம்பியரில் இலர் - உனது தம்பிமார்களிலும் இல்லை,என்றும் சாற்றினான் - என்றும் (கண்ணன்) கூறினான்;
புஜபலத்திலும் கதாயுதப் பயிற்சியிலும் சல்லியன் மிகமேம்பட்டவனாதலால், அவனுக்குச் சமானமானவர் அறுவகைப்பட்ட வீரரிலுமில்லை; மிகச் சிறந்த உனது தம்பிமாரும் அவனுக்கு ஒப்பாகார் என்றனனென்பதாம். என்றது, நீயே அவனுக்குச் சமமானவனென்றவாறு; அத்தன்மை,அடுத்த கவியால் விளங்கும். செல் இயல் - (விரைவில்) மேகம்போன்றதன்மையுள்ள என்றும் உரைக்கலாம். மல் இயல் - மற்போரிற் பயின்றஎனினுமாம். மல் - ஆயுதமில்லாமலே தேகபலத்தால் உடம்பினுறுப்புக்களைக்கொண்டு எதிர்த்து மோதிச் செய்யும் போர். பொற்றோள் - பொன்னாபரணம்அணிந்த தோளுமாம்; பொன் - கருவியாகுபெயர். 'நின்தம்பியரில் இலர்'என்றது, அருத்தாபத்தியால், நீயே ஒப்பவ னென்பதைக் காட்டிற்று. பரி -(பாரத்தைப்) பரிப்பது; பரித்தல் - சுமத்தல். கரம் - கை; இங்கே,துதிக்கை; அதனையுடையது கரீ: வடமொழிக்காரணப் பெயர். வலிக்கும்,தண்டுக்கும் - உருபுமயக்கம். தோள்வலிமையிலும் கதைப்போரிலும்மிகச்சிறந்த வீமனும் தனியே சல்லியனோடு எதிர்த்துப் போர்செய்துவெல்லவல்லவனல்ல னென்பது, மூன்றாமடியின் உட்கோள். வெங்கரியாளிற்றேராளிற் பரியாளில் என்று பாடாந்தரம். (17) 18. | அருவரையோ ரிரண்டிருபாலமைந்தனையதடம்புயங் கண்டவனி வேந்தர், வெருவருபோர்மத்திரத்தான் வேறொருவர் மேற்செல்லான்நின் மேலன்றி, யிருவருமே முனைந்துமுனைந்திரவிகடல் விழுமளவு மிகல்செய்தாலும், ஒருவரொருவரைவேறலொண்ணாதின்று மக்கென்று முரை செய்தானே. |
(இ -ள்.) அரு - அழித்தற்கு அரிய, வரை ஓர் இரண்டு - இரண்டுமலைகள், இருபால் - இரண்டுபக்கங்களிலும், அமைந்து அனைய- பொருந்தினாற் போன்ற, தடபுயம் - பெரிய (தனது) தோள்களை, கண்டு - பார்த்து, அவனிவேந்தர் - பூமியையாளுகிற அரசர்கள், வெருவரு - அஞ்சும்படியாகவுள்ள, போர் மத்திரத்தான் - போரில்வல்லவனான |