அருச்சுனன் முதலிய மூவரையும் வெவ்வேறுவீரர்களுடன் போர்செய்யச் செலுத்திவிட்டு நீயும் வீமனும் ஒருங்கேசென்று சல்லியனை யெதிர்த்துப் பொருது உயிர்வாங்கவெண்டு மென்றான். பார்த்தன் - பிருதையின் மகன்; வடமொழி தத்திதாந்தநாமம்; (பிருதை யென்பது - குந்தியின் இயற்பெயர்:) பார்த்தன் என்றது - சிறப்பாய், அருச்சுனனைக் குறிக்கும். பரி, அசுவம் என்பன - குதிரையாகிய ஒருபொருளைக் குறிப்பன வாதலால், அசுவத்தாமாவைப் பரித்தாமா வென்றார். அசுவத்தாம னென்பது - குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்று பொருள்படும். மாத்திரி - மத்திரதேசத்து அரசன்மகள்; சௌபலன் - சுபலனென்னும் அரசனது குமாரன். நகுலன் குதிரைத்தொழிலில் வல்லவனாதல், அஜ்ஞாதவாசத்திலும் பிரசித்தம். (19) வேறு. 20.-திட்டத்துய்மன் அணிவகுத்தலும்,இருசேனையும் போர் தொடங்கலும். கிருபை யாலுயர் கேசவ னிங்கிதக்கேள்விகளுணர்வுறக்கேட்டுத், துருப தேயனுந் தன்பெருஞ் சேனையைத்துன்றிய வியூகமாத் தொடுத்து, நிருபர் யாவருஞ் சூழ்வரத்தாழ்சலநிதியென விதியென நின்றான், பொருபதாகினியிரண்டினுமுனையுறப்போர் வல்லோர் தூசிகள் பொரவே. |
இதுவும், அடுத்தகவியும் - குளகம். (இ -ள்.) கிருபையால் உயர் - அருளினாற் சிறந்த, கேசவன் - கண்ணபிரானது, இங்கிதம் கேள்விகள் - குறிப்பான உபதேச வார்த்தைகளை, உணர்வுஉற கேட்டு - மனத்தெளிவோடு (தருமபுத்திரன்) கேட்டவுடன்.- துருபதேயனும் - துருபதராச குமாரனான திருஷ்டத்யும்நனும், தன்பெரு சேனையை - தன் பக்கத்துப் பெரிய சேனையை, துன்றிய வியூகம் ஆ தொடுத்து - நெருங்கிய படைவகுப்பாக அணிவகுத்து, நிருபர் யாவரும்சூழ்வர - அரசர்களெல்லோரும் (தன்னைச்) சுற்றிலும்வர, (அவர்கள் நடுவில்), தாழ் சலநிதி என - ஆழ்ந்த கடல்போலவும், விதி என - பிரமன்போலவும், நின்றான் - (சிறப்பாக) நின்றான்; (பின்பு), பொரு பதாகினி இரண்டினும் - போருக்குச்சித்தமான இரண்டுசேனைகளிலும், போர் வல்லோர் தூசிகள் - போரில்வல்ல வீரர்களது முன்னணிச் சேனைகள், முனை உற பொர - முற்படப் போர்செய்ய, (எ - று.)-மேல் 'பூபதி தருமன் வந்தான்' என முடியும்.
எதற்குங்கலங்காதகம்பீரமான தோற்றத்துக்கு ஆழ்ந்த கடலையும், ஒழுங்காகப்படைவகுத்த திறமைக்குப் படைத்தற்கடவுளான பிரமனையும் உவமை கூறினார். கேசவன் என்ற வடமொழித்திருநாமம் - பிரமனையும் சிவனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் [க - பிரமன், ஈச - சிவன்] மயிர் முடியழகுடையவ னென்றும் [கேசம் - தலைமயிர்முடி] கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றுங் |