பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்25

காரணப்பொருள்படும். பெருஞ்சேனை - பெருமையையுடைய சேனை;
அதிகமான சேனையெனின், பதினைந்தாஞ் செய்யுளில் 'சிலபடை' என்றதோடு
மாறுகொளக்கூறலாம்.  ஜலநிதி - நீர்நிறையுமிடம்.  பதாகா - கொடி;
அதனையுடையது, பதாகிநீ.  'கேட்டு' என்பதை, கேட்கவென, எச்சத்திரிபாக்கி
'நின்றான்' என்பதனோடு முடிக்க.

     இதுமுதற்பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.                      (20)

21.-சல்லியன் தருமன்மேற்போருக்கு வருதல்.

ஆயபோதினிற் குருபதிபதாகினிக்கதிபதியாய பூபதியம்,
மாயவன் புகன் மொழிப்படி தருமன் மாமதலைமேல் விரைவுடன்
                                          வந்தான்,
காயும் வெங்கனற் கண்ணினன் செவியுறக் கார்முகங்குனித்த
                                       செங்கரத்தான்,
தீயவாகிய சிலீமுகமுரனுறச்சொரிதருசிங்கவேறனையான்.

     (இ -ள்.) ஆய போதினில் - இவ்வாறான அச்சமயத்தில், - குருபதி
பதாகினிக்கு அதிபதி ஆய பூபதி - குருகுலத்துக்குத் தலைவனான
துரியோதனனது சேனைக்குத் தலைவனாகிய சல்லியராசன்,-காயும் -
கொதிக்கிற, வெம் - கொடிய, கனல் - நெருப்பைச்சொரிகிற, கண்ணினன் -
கண்களையுடையவனும், செவி உற - தன்காதினை யளாவ, கார்முகம் குனித்த
-வில்லை வளைத்து நாணியையிழுத்த, செம் கரத்தான் - சிவந்த
கையையுடையவனும், தீய ஆகிய - கொடியவையான, சிலீமுகம் - அம்புகளை,
உரன் உற - வலிமை பொருந்த, சொரிதரு - மிகுதியாக எய்கிற, சிங்கம் ஏறு
அனையான் - ஆண்சிங்கம்போன்றவனுமாய்,- அ மாயவன் புகல் மொழிப்படி
தருமன் மா மதலை மேல் விரைவுடன் வந்தான் - கண்ணன் கீழ்ச்சொன்ன
வார்த்தையின்படியே சிறந்த தருமபுத்திரன்மேல் துரிதமாக வந்தான்; (எ - று.)

     பூபதி- பூமிக்குத் தலைவன்.  கார்முகம் என்றது - தொழிலிற் சிறந்த
தென்றும் [கர்மம் - தொழில்], சிலீமுகம் என்றது - கூர்மையை
நுனியிலுடையதென்றும் [சிலீ - கூர்மை] காரணப்பொருள்படும். வீரனுக்கு
ஆண்சிங்கம் - பலபராக்கிரமங்களாலும், நடையாலும், உவமம். தற்காலத்தில்
குருநாட்டையாள்பவன் துரியோதனனாதலால், குருபதி யெனப்பட்டான்.(21)

22.-தருமன் சல்லியனை யெதிர்த்துப்போர்தொடங்கல்.

எதிரிதேர்வரும் வன்மைகண்டிமிழ்முரசெழுதிய கொடி
                                    நராதிபனுங்,
கதிரினேழ்பரிதேரினுங் கடியதன் கவனமான்
                                 றேரெதிர்கடவி,
முதிரமேல் வருங்கணைகளைக்கணைகளான்முனைகொடுமுனை
                             கொள்கார் விசும்பிற்,
பிதிர்படும்படிதொடுத்தனன் றொடித்தடக்கையினிற்
                              பிடித்தவிற்குனித்தே.

     (இ -ள்.) எதிரி தேர்வரும் வன்மை கண்டு - (தன்னை)
எதிர்ப்பவனானசல்லியனது தேர் வருகிற வலிமையைப் பார்த்து,-இமிழ்