பக்கம் எண் :

28பாரதம்சல்லிய பருவம்

களின் தெறித்து- கைவிரல்களால் தெறித்து ஓசையுண்டாக்கி, வடிகணை
முனைஉற அடைசி - கூரிய அம்புகளைப் போர்க்குப் பொருந்துமாறு
வில்முனையில்வைத்து, செல் எடுத்த பேர் இடி என - மேகங்கொள்ளுகிற
பெரிய இடியைப்போல, முறை முறை தொடுத்தனர் - ஒருவர்மேல் ஒருவர்
பிரயோகித்தார்கள்; (எ - று.)

     நிலை- போரில்வில்வளைத்து அம்பினை யெய்வார்க்கு உரிய நிலை.
சாபத்தாற் பெண்வடிவமான ருக்ஷரஜஸ்என்கிற வானரராசனது வாலின்
அழகைக் கண்டு காதல்கொண்ட இந்திரனுக்கு அப்பெண் குரங்கினிடம்
பிறந்தவன் வாலி யென்றும், அவ்வாறே அதன்கழுத்தினழகைக்கண்டு காமுற்ற
சூரியனுக்கு அதனிடத்தில் தோன்றியவன் சுக்கிரீவனென்றும் உணர்க.  வாலீ-
வாலில்வலிமையுடையவனென்று காரணப்பொருள்படும்; வாலிசுக்கிரீவர்
தம்முள்மாறு கொண்டு பொருதமை, இராமாயணத்திற்பிரசித்தம்.  சுக்கிரீவன்
என்ற பெயர் - அழகியகழுத்துடையவனென்று பொருள்படும்; அப்பெயரின்
பொருளை 'மணிக்கழுத்துடையவன்' என்றார் செல் - (விரைந்து)
செல்லுதல்பற்றி மேகத்துக்கு வந்த காரணப்பெயர்.  ஈற்றடி -
உவமையணி.                                             (25)

26.-இருவரும் சிறிதுபொழுதுசமமாகப் பொருதல்.

எய்தவம்புக ளிருவர்மெய்யினும்படாதிடையிடை யெஃகுடைத்
                                        தலைகள்,
கொய்தவம்புகளாகியே முழுவதும் விழுந்தனகூறுவதென்கொல்,
கைதவம்புகலுதற் கிலாவெண்ணுடைக் கருத்தினர்
                                  திருத்தகுவரத்தாற்,
செய்தவம் புரையறப்பலித்தனையவர்திருக்கணுங்கைகளுஞ்
                                          சிவந்தார்.

     (இ -ள்.) எய்த அம்புகள் - (இரண்டுபேரும்) செலுத்திய பாணங்கள்,
இருவர் மெய்யினும் படாது - இரண்டுபேருடைய உடம்பிலும் படாமல், இடை
இடை - நடுவிலே நடுவிலே, எஃகு உடை தலைகள்கொய்த அம்புகள் ஆகி -
கூர்மையுடைய நுனி துணி்பட்ட பாணங்களாகி, முழுவதும் விழுந்தன -
எங்குங் கீழ்விழுந்திட்டன; கூறுவது என் கொல் - (அவர்கள்)
போர்த்திறத்தைப்பற்றிச் சொல்லவேண்டுவதென்ன? கை தவம்புகலுதற்கு இலா
எண் உடை கருத்தினர் - வஞ்சனையுள்ளதென்று சொல்லுதற்குச் சிறிதும்
இடமில்லாத நல்லெண்ணமுடைய மனத்தையுடையவர்களும், திரு தகு
வரத்தால் - மேன்மைபொருந்திய வரங்களைப் பெறும்படி, செய் - செய்த,
தவம் - தபசு, புரை அற - பழுது படாமல், பலித்து அனையவர் -
பயன்பட்டாற் போன்றவர்களுமான அவ்விருவரும், திரு கணும் கைகளும்
சிவந்தார் - (யுத்தாவேசத்தால்) அழகிய (தங்கள்) கண்களும் கைகளும்
செந்நிறமடையப் பெற்றார்கள்; (எ - று.)

     வஞ்சகமானஎண்ணம் சிறிதும் இல்லாதவர்களும், நற்றவப்பயன் சித்தி
பெற்றார்போலத் திறன்பெற்றவர்களுமான தருமனும் சல்லியனும்
மிக்ககோபத்தாற் கண்சிவந்து இடைவிடாது விற்பிடித்து அம்புதொடுத்தலாற்
கைசிவந்து பொருகையில் இருவரும் ஒருவர்மேலொருவர் எய்த
அம்புகளெல்லாம் அவர்கள்மீது படாமல் தம்மில் ஒன்றோடொன்று தாக்கி
அழிந்து இடையிற் கீழ்விழுந்திட்