டன; இப்படிகுறிதவறாமல் எதிரெதிரே அம்புதொடுத்துப் பொருதவியப்புக் கூறுதற்கு அரிது என்பதாம். கண்களும்கைகளும் சிவந்தார் - உயர்திணைதொடர்ந்த அஃறிணைச் சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடிபையே கொண்ட திணைவழுவமைதி.(26) 27.-சல்லியன் தருமனது பாகனையும்வில்லையும் குடையையும் அழித்தல். கிரித்தடங் குவடனைய கேசரிநிகர்சல்லியன் முரசகேதனன்றன், பரித்தடந்தனித்தேர் விடும் பாகனைப் பாணமொன்றாற் றலைதுணித்து, வரித்தடஞ்சிலை நாணறுத் தொருமுனைவாளியால்வடிக்கணை யொன்றால், விரித்த வெண்குடை மகுடமுமொடித்தனன்வில்வலோ ரெவரினு மிக்கோன். |
(இ -ள்.) (பின்பு),-வில் வலோர் எவரினும் மிக்கோன் - விற்போரில் வல்லவர்யாவரினுஞ் சிறந்தவனாகிய, தட கிரி குவடு அனைய கேசரி நிகர் சல்லியன் - பெரியமலைச்சிகரத்தையொத்தவனும் ஆண் சிங்கம்போன்றவனுமான சல்லியன்,- முரசகேதனன்தன் - முரசவாத்தியத்தின் வடிவமெழுதிய கொடியையுடைய தருமனது, பரி தட தனிதேர் விடும் பாகனை- குதிரைகள் பூண்ட பெரிய ஒப்பற்ற தேரைச் செலுத்துஞ் சாரதியை, பாணம்ஒன்றால் தலைதுணித்து - ஓரம்பினால் தலையை யறுத்து,- வரி தட சிலைநாண் - கட்டமைந்த பெரிய வில்லின் நாணினை, ஒரு முனை வாளியால் - கூர்நுனியையுடைய அம்பொன்றினால், அறுத்து-, வடி கணை ஒன்றால் - கூரியஅம்பொன்றினால், விரித்த வெள்குடைமகுடமும் ஒடித்தனன் -பரந்தவெண்குடையின் கலசத்தையுந்துணித்திட்டான்; (எ - று.)
'கிரித்தடங்குவடனைய''கேசரிநிகர்' என்ற இரண்டும் - சல்லியனுக்கு அடைமொழி. சலிப்பில்லாத உறுதிக்கும் வலிமைக்கும் மலையையும், பல பராக்கிரமங்களுக்கு ஆண்சிங்கத்தையும் உவமைகூறினார். கேஸரம் - பிடரி மயிர்; அதனையுடையது கேஸரீ யெனக் காரணக்குறி. (27) 28.-அதுகண்டு வீமன் வந்து சல்லியனுக்குமாறுசெய்தல். வலவன் வீழ்ந்ததுந் தனுவினா ணற்றதுமனத்தழுக்கிலாவாய்மைப், புலவன் வெண்குடை யொடிந்தது மேல்வரு போற்றலனேற்றமும் பொறாமற், குலவுதிண்சிலைக் குரிசிலைத்தம்முனைக்கொண்டவீரிய மெலாங்கொண்டான், கலவமாமயி லொழித்துப்பஞ்சானனமெழுதிய தனிக்கொடிக்கந்தன். |
(இ -ள்.) மனத்து அழுக்கு இலா - மனத்திலே களங்கமில்லாத, வாய்மை - சத்தியத்தையுடைய, புலவன் - தேர்ந்த அறிவுடையவனானதருமபுத்திரனது, வலவன் - தேர்ப்பாகன், வீழ்ந்ததும் - (சல்லியனம்புகளால்) தலையற்று விழுந்ததையும், தனுவின் நாண் - வில்லின் நாணி, அற்றதும் - அறுபட்டதையும், வெள் குடை - ஒற்றை வெண்கொற்றக்குடை, ஒடிந்ததும் - ஒடிபட்டதையும், மேல் வரு - |