வேந்தர்யாரினும் புகழ் மிக்கோன் - அரசர்களெல்லாரினுங் கீர்த்தி மிக்கவனுமான தருமன்.- தனது திண்கையின் சரத்தினும்தம்பி கைச்சரம்விரைந்து உடற்றலின் - தன்னுடைய வலியகையினா லெய்யப்பட்ட அம்புகளினும் தனது தம்பியான வீமன் கையாலெய்யும் அம்புகள் துரிதமாகச்சென்று இலக்கையழித்தலால்,-எனது தோள்களில் இளையவன் தனக்கு வேறுயாது எனும் எண் உடை மனத்தான் - 'எனது தோள்களினும் எனது தம்பிக்கு வேறுபாடு என்ன?' என்னும் எண்ணமுடைய மனத்தையுடையவனாய்,- தடகை கன தனுத்தனை ஊன்றி நின்று - (தனது) பெரிய கையிற் பிடித்துள்ள வலிய (நாணற்ற) வில்லின் தண்டத்தை (ஊன்றுகோலாகக்கொண்டு) ஊன்றி நின்று, இருவரும் கணக்கு அற மலையும் ஆ கண்டான் - இரண்டுபேரும் அளவில்லாமற் போர்செய்யும் விதத்தைப்பார்த்தான்; (எ - று.) கீர்த்திமிக்க தருமன், வலிமையிற் சிறந்தவனாயினும், தன் கையம்புகளினும் வீமன் கையம்பு விரைந்துசென்று பகைவனது சாரதி முதலியவற்றை அழித்தலால், தான் சல்லியனோடு மீண்டும் போர்செய்யத் தொடங்காமல், தனதுகையிலுள்ள விற்கழுந்தை ஊன்றிக்கொண்டு நின்று, வீமன்சல்லியனோடு சமமாகப் பொரும் விநோதத்தைப் பார்த்திருந்தான். இப்படிதன்னை யழித்தவனைத்தான் எதிர்த்து அழிக்கத் தொடங்காமல் வேறொருவன்இடையில் வந்து தன் எதிரியோடு பொருதலைப் பார்த்துத் தான் சும்மாஇருத்தல் தருமனது பலத்துக்கும் புகழுக்கும் குறைவாகாதோவெனின்,- தனதுதோள்களோடு தம்பியோடு வாசியில்லையென்று வீமனைத் தனதுதோளாகவேபாவித்து நிற்கும் அபிமானமுடையவனாதலால், அவன் பொருதலைத் தனதுதோள்பொருவதாக ஒற்றுமை நயம்படக் கருதிச் சும்மாவிருந்தமைபற்றி அதுகுறைவாகாது என்க. "ராமஸ்ய தக்ஷிணோ பாஹு :" என்றதுங் காண்க. உறுப்பாகிய தோள் போலவே தம்பி சிறந்த அங்கமாய்ச் சமயம் அறிந்துவிரைந்து உதவுந் தகுதியுடையானென்க. கருடன்- காசியபமுனிவனது மனைவிமார்களுள், விநதையினிடம் பிறந்தவன். பக்ஷிராசனும், திருமாலுக்கு வாகனமுமாகிய கருடன் பலத்திற் சிறந்தவனென்பது பிரசித்தம். (29) 30.-வீமனும் சல்லியனும்சமமாகப் பொருதல். எந்தவெந்த வெஞ்சாயகமறையுடனிமையவர் முனிவரர் கொடுத்தார், அந்தவந்த வெஞ்சாயகமடங்கலுமவரவர்முறைமையிற்றொடுத்தார், முந்தமுந்த மற்றுள்ள வாயுதங்களுமுடிமுதலடியளவாக, உந்தவுந்த வெங்குருதியு மூளையுமுகவுகவுடற்றினாருரவோர். |
(இ -ள்.) எந்த எந்த வெம் சாயகம் - எந்தெந்தக் கொடிய அம்புகளை,மறையுடன் - வேதமந்திரத்துடனே, இமையவர் - தேவர்களும், முனிவரர் -சிறந்த இருடிகளும், கொடுத்தார் - (முன்பு தங்களுக்குக்) கொடுத்துள்ளார்களோ, அந்த அந்த வெம் சாயகம் அடங்கலும் - அந்தந்தக் கொடிய அம்புக ளெல்லாவற்றையும், அவர் அவர் - அவ்விரண்டுபேரும், முறைமையின் தொடுத்தார் - வரிசையாக |