புஜங்கம் - மார்பினாற் செல்வதென்றும், வளைந்து செல்வதென்றுங் காரணப்பொருள் கொள்ளலாம். நஞ்சு - நச்சு எனவன்றொடராயிற்று. சிறகர் - சிறகு என்னுங் குற்றியலுகரத்துக்கு, அர் - போலி. புங்கம்-அம்பின் அடியுமாம். (36) 37.-சல்லியன் மீண்டும்தருமன்மேற் போர்தொடங்கல். இருபெருஞ் சேனை யோரு மிப்படிச்செருச்செய் காலைத் தருமன் மாமதலைதன்மேற்சல்லியன்றானுமீளப் பொருபரித் தடந்தேருந்திப்புகைகெழு முனைகொள்வாளி ஒருதொடைதன்னிலோரேழுரத்துடன்றுரத்தினானே. |
(இ -ள்.) இரு பெரு சேனையோரும் - பெரிய இரண்டு சேனையிலுள்ளவீரர்களும், இ படி செரு செய் காலை - இப்படி போர்செய்த பொழுது,-சல்லியன் தானும் - சல்லியனும்,- மீள - மறுபடியும், பொரு பரி தட தேர்உந்தி - போருக்குஉரிய குதிரைகள் பூட்டிய பெரிய தனது தேரைச் செலுத்தி, -புகை கெழு முனை கொள் வாளி ஓர் ஏழ் - உக்கிரத்தாற் புகையெழும்பும்நுனியைக்கொண்ட ஏழு பாணங்களை, ஒருதொடை தன்னில்- ஒரேபிரயோகத்தில், தருமன் மா மதலைதன்மேல் - சிறந்த தருமபுத்திரன் மீது,உரத்துடன் துரத்தினான் - வலிமையோடு செலுத்தினான்; (எ - று.) ஒருதொடை தன்னில் - தொடுக்குந்தர மொன்றில்; ஒரே தொடர்ச்சியாய் என்றபடி. (37) 38.-சல்லியன், சுமித்திரன்முதலியோரைக் கொல்லுதல். பின்னரும் விரைவினோடும்பெய்கணை மாரிசிந்தி முன்னரு முனையினின்றோர்முதுகிட முரண்டுசீறித் துன்னருந்தடந் தேராண்மைச்சுமித்திரன் முதலாவுள்ள மன்னரை யிமைத்த கண்கண்மலருமுன் மடிவித்தானே. |
(இ -ள்.) பின்னரும் - பின்பும், (சல்லியன்), விரைவினோடும் - வேகத்துடனே, பெய் கணை மாரி சிந்தி - மிகுதியாக எய்கிற அம்புகளை மழைபோலச் சொரிந்து,- முன் அரு முனையில் நின்றோர் முதுகு இட - நினைத்தற்கும் அருமையான போர் முனையில் தன்னையெதிர்த்து நின்ற வீரர்கள் புறங்கொடுத்தோடும்படி, முரண்டுசீறி - (அவர்கள் மேல்) மாறுபாடுகொண்டு கோபித்து, துன் அரு - (எவரும்) கிட்டுதற்கும் அருமையான, தடதேர் - பெரிய தேரையும், ஆண்மை - பராக்கிரமத்தையுமுடைய, சுமித்திரன் முதல் ஆ உள்ள மன்னரை - சுமித்திரன்முதலாகவுள்ள அரசர்களை, இமைத்த கண்கள் மலரும் முன் மடிவித்தான் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே அழித்திட்டான்; (எ - று.)
இமைத்தகண்கள் மலருமுன் - இயல்பில் ஒருகால் மூடினகண்களைத் திறப்பதற்குமுன்: இது, விரைவுவிளக்கும். முரண்டு என்ற இறந்தகாலவினையெச்சத்தில், முரண் - பகுதி. (38) |