ஸமீரணன் - நன்றாகச்சஞ்சரிப்பவனென்று காரணப்பொருள்படும். பாகு - யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்; இது - இலக்கணையாய், அத்தொழிலுடைய பாகனைக் குறித்தது. (43) 44.-சல்லியனதுதேர்க்காவலாளரையும் சேனையையும் வீமன் அழித்தல். உற்றிரு புறத்துந் திண்டேர்க் குரனுற வுதவியாய கொற்றவர் பலரும் வீழக் கொடிகுடை கவரி வீழச் சுற்றியநேமிவாசிதுளைக்கரக் கோட்டுநால்வாய்ப் பொற்றைகடுணிந்துவீழப்புங்கவாளிகளுந்தொட்டான். |
(இ -ள்.) இரு புறத்தும் உற்று - (சல்லியனது) இரண்டு பக்கங்களிலும் பொருந்தி, திண்தேர்க்கு - (அவனுடைய) வலியதேருக்கு, உரன் உற - உறுதிபொருந்த, உதவி ஆய - துணையாகவுள்ள, கொற்றவர் பலரும் - முன்புவெற்றியையுடைய பல அரசர்களும், வீழ-இறந்து கீழ்விழும்படியாகவும்,-கொடி- (அவனுடைய) துவசமும், குடை - குடையும், கவரி - சாமரமும், வீழ -துணிபட்டுக் கீழ் விழும்படியாகவும், சுற்றிய - (அவனைச்) சூழ்ந்துள்ள, நேமி -தேர்களும், வாசி - குதிரைகளும், துளை கரம் - உள்துளையுள்ளதுதிக்கையையும், கோடு - தந்தங்களையும், நால் வாய் - வெளியேதொங்குகிறவாயையுமுடைய, பொற்றைகள் - மலைகள்போன்ற யானைகளும், துணிந்துவீழ- துண்டுபட்டுக் கீழ்விழும்படியாகவும், புங்கம் வாளிகளும் தொட்டான் -(மற்றும்) சிறந்த அம்புகளைப் பிரயோகித்தான், (வீமன்); (எ - று.) நேமிஎன்னுஞ் சக்கரத்தின் பெயர் - சினையாகுபெயராய்த்தேரைக் குறித்தது. நால்வாய்-வினைத்தொகை. பொற்றை என்ற மலையின் பெயர், யானைக்கு உவமவாகுபெயராம். (44) 45.-அனைவரும் போர்செய்தல். துருபதன் முதலா வுள்ளோர் சோமகர் முதலாவுள்ளோர் நிருபர்தங்குலத்துளேனைநிருபர்களாகியுள்ளோர் தருமன்மாமதலையோடுந்தம்பியரோடுங்கூடி ஒருமுகமாகிமேற்சென்றுறுசெருப்புரியும்வேளை. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) துருபதன் முதல் ஆ உள்ளோர் - துருபதராஜன் முதலாகவுள்ள அரசர்களும், சோமகர் முதல் ஆ உள்ளோர் - (அவன் பிறந்த)சோமககுலத்தார் முதலாகவுள்ள அரசர்களும், ஏனை நிருபர் தம் குலத்துள் -மற்றும் பல அரசர்கள் குலங்களில்தோன்றிய, நிருபர்கள் ஆகியுள்ளோர் -அரசர்களும், தருமன் மா மதலையோடும் - சிறந்த தருமபுத்திரனுடனும்,தம்பியரோடும் - (வீமன்முதலிய) தம்பிமார்களுடனும், கூடி - சேர்ந்து, ஒருமுகம் ஆகி - ஒரேமுகமாய், மேல் சென்று - பகைவர்மே லெதிர்த்துப் போய்,உறு செரு புரியும் வேளை - |