பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்43

பத்தைப்பொறுக்கமாட்டாததேவர்முனிவர் முதலியோரது வேண்டுகோளால்,
சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திரசூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும்,
நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும்,
மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை
வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தனாய்ச் சென்று போர் செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து
அவ்வசுரரனை வரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம்.(47)

48.-அருச்சுனன் அசுவத்தாமனதுசாரதி குதிரை
முதலியவற்றை அழித்தல்.

தொடுத்தவம்பினையம்பினால்வானிடைத்துணித்திடைநணித்தாக
விடுத்தவம்பினான்மருவலன்பாகனும்வெம்பரிகளும்வில்லும்
நடுத்தறிந்திடமார்பினுந்தோளினுநாலிருகணையெய்தான்
எடுத்தவெஞ்சிலைதறிதலுமவனுமாவிரதம்விட்டிழிந்தானே.

     (இ -ள்.) தொடுத்த அம்பினை - அசுவத்தாமன் (தன்மேற்)
பிரயோகித்தஅம்புகளை, அம்பினால் - (தான்எய்யும்) எதிரம்புகளால்,
வானிடை துணித்து -வானத்திலே [தன்னை நெருங்குதற்கு முன்
இடைவெளியிலேயே] துண்டித்து,இடை நணித்து ஆக விடுத்த -
அவனிடத்திலே சமீபித்ததாம்படி (மற்றும்தான்) செலுத்தின, அம்பினால் -
பாணங்களால், மருவலன் - எதிரியானஅவ்வசுவத்தாமனது, பாகனும் -
சாரதியும், வெம் பரிகளும் - வெவ்வியதேர்க்குதிரைகளும், வில்லும் -, நடு
தறிந்திட - இடையிலே துணி படும்படி,(செய்து), மார்பினும் தோளினும் -
(அவனுடைய) மார்பிலும் தோள்களிலும்,நால் இரு கணை எய்தான் - எட்டு
அம்புகளைத் தொடுத்தான்; அவனும் -அந்த அசுவத்தாமனும், எடுத்த வெம்
சிலைதறிதலும் - கையிற்பிடித்த கொடியவில் முறிந்தவளவிலே, மா இரதம்
விட்டு இழிந்தான் - பெரிய (தனது)தேரைவிட்டு இறங்கினான்; (எ - று.)

49.-மீண்டும் பொருதஅசுவத்தாமனை அருச்சுனன்
வெல்லுதல்.

இழிந்துமீளவும்வேறொருவில்லெடுத்தெரிமுனைபுகைகாலப்
பொழிந்தவாளியோரளவிலவவற்றையும்பொடிபடுத்தினன்பார்த்தன்
கழிந்தநீர்க்கணைகோலிவந்தெதிர்ந்துதன்கார்முகக்கட்டாண்மை
அழிந்துபோயினன்முனிமகனெனவெழுந்தார்த்ததுபெருஞ்சேனை.

     (இ -ள்.) இழிந்து - (அசுவத்தாமன் தேரைவிட்டு) இறங்கி, வேறு ஒரு
வில் எடுத்து-, எரி முனை புகை கால - நெருப்பையும் உக்கிரமான
புகையையும் வெளிப்படுத்தும்படி, மீளவும் - மறுபடியும், பொழிந்த  -
(அருச்சுனன் மேற்) சொரிந்த, வாளி - அம்புகள், ஓர் அளவு இல -
கணக்கில்லாதனவாம்;  அவற்றையும் - அவையனைத்