பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்45

'வெஞ்சினமனமத்தவாரணமன்னான்' என்றது.  அசுவத்தாமனது
மிக்கவலிமைக்குமுன் பலவீரர்களுஞ் சிறுமைப்படுந் தன்மையைக் கருதி,
அவர்களிடத்துச் சிறுதானியமான தினையின் தன்மையையேற்றிக் கூறினார்.

    முன்பொருகாலத்தில் மலைகளெல்லாம் பறவைகள் போல்
இறகுடையனவாயிருந்து அவற்றால் உலகமெங்கும் பறந்துதிரிந்து பல
இடங்களின் மேலும் உட்கார்ந்து அவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே
அழித்துவர, அதனை முனிவர்முதலியோராலறிந்த தேவேந்திரன்
சினந்துசென்றுதனதுவச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளை யறுத்துத்
தள்ளிவிட்டனனாதலால், 'பொருப்பு உலக்கையுற்று அலமரவரிந்தவன்'
என்றார். மூன்றாமடியில், உலக்கை - உலத்தல்: தொழிற்பெயர்.    (50)

51.-பின்பு அசுவத்தாமன்எறிந்த கதாயுதத்தை அருச்சுனன் துணித்தல்.

உலக்கையெட்டுறுப்பானபினொருதனித்தண்டுகொண்டுயர்கேள்வி
அலக்கைவித்தகனிளவறேர்விடவருமருச்சுனன்றடந்தோளாம்
இலக்கையுற்றிடவெறிந்தனனெறிதலுமிவனவனெறிதண்டை
வலக்கையிற்றொடுகணைகளாற்பலதுணியாகவில்வளைத்தானே.

     (இ -ள்.) உலக்கை எட்டு உறுப்பு ஆனபின் - உலக்கை எட்டுத்
துண்டுகளானபின்பு, (அசுவத்தாமன்), ஒரு தனி தண்டுகொண்டு -
ஒப்பற்றதொருகதாயுதத்தை எடுத்து,- உயர் கேள்வி - சிறந்த நூற்கேள்வியை
யுடைய, அலம் கை வித்தகன் இளவல் - கலப்பையை ஆயுதமாக ஏந்திய
கைகளையுடைய வல்லமைசாலியான பலராமனுடையதம்பியானகண்ணன், தேர்
விட-(தனக்குப் பாகனாய் நின்று) தேர்செலுத்த, வரும் - வருகிற, அருச்சுனன்
- அருச்சுனனது, தட தோள் ஆம் - பெரிய தோளாகிய, இலக்கை - குறியை,
உற்றிட - அடையும்படி, எறிந்தனன் - வீசினான்; எறிதலும் - வீசியவுடனே,
இவன் - அருச்சுனன், அவன் எறி தண்டை - அந்த அசுவத்தாமன் வீசிய
கதாயுதத்தை, வலக்கையின் தொடு கணைகளால் - (தனது) வலக்கையாலும்
தொடுக்கும் அம்புகளால், பல துணி ஆக - அநேகந்துண்டாகும்படி, வில்
வளைத்தான் - வில்லை வளைத்துப் பொருதான்;

    அருச்சுனன் வில்லைவளைத்து வலக்கையால் அம்புதொடுத்து
அசுவத்தாமனது கதைப்படையைப் பல துண்டாக்கின னென்பதாம்.
அருச்சுனன் மற்றையோர்போல வலக்கையினால் மாத்திரமே யன்றி இடக்
கையாலும் அம்பு தொடுக்கவல்லவனாய்ச் சவ்வியசாசியென்று ஒருபெயர்
பெற்றுள்ளதறிக.  உயர்கேள்வி - வினைத்தொகை.  ஆகவே, 'வலக்கையில்
தொடு' என்றது' இங்கு - பிறிதினியைபுநீக்கிய விசேஷணம்.        (51)

52.-பின்பு அசுவத்தாமன்வெறுத்துப் புறங்கொடுத்தல்.

பூத்தபைங்கொடியனையமெய்ப்பூணணிபொதுவியர்தனந்தோயுந்
தூர்த்தன்வெம்பரித்தேர்விடுமளவுமிச்சுரபதிமகனோடுங்