(இ -ள்.) மதி கண்ட பெரு கடல் போல்-சந்திரனைக் கண்ட பெரிய கடல் பொங்குவதுபோல, குந்தி மைந்தர் வன்சேனை ஆர்ப்பதுவும் - பாண்டவர்களது வலிய சேனை (தருமன் வெற்றியைக் கண்டு மகிழ்ந்து) ஆரவாரிப்பதையும், மன்னன் சேனை - துரியோதனனுடைய சேனை, நுதி கொண்ட கனல்கொளுத்தும் இராமபாணம் நுழைகடல்போல் - கூர்மையைக்கொண்டதும் நெருப்பை மூட்டுவதுமான இராமனது அம்பு தொடுக்கப்பெற்ற கடல்போல, நொந்ததுவும் - (சல்லியனிறந்தசோகத்தால்) வருந்தியதையும், நோக்கி நோக்கி - பார்த்துப் பார்த்து,- கதி கொண்ட பரி தடதேர் சல்லியன்தன் கண்போல்வார் - பலவகைநடைகளைக்கொண்ட குதிரைகளைப் பூட்டிய பெரிய தேரையுடைய சல்லியனுக்குக் கண்போல் இன்றியமையாத அங்கமாயுள்ள, எழுநூறு கடு தேர் ஆட்கள் - கொடிய தேர் வீரர் எழுநூறு பேர், விதிகொண்ட படைபோல் வெம் படைகள் ஏவி - பிரமாஸ்திரம்போலக் கொடிய ஆயுதங்களைப் பிரயோகித்துக்கொண்டு, வெம்முரசம் கொடிவேந்தன் மேல் சென்றார் - பயங்கரமான முரசக்கொடியையுடைய தருமராசன்மேல் (போர்க்குச்) சென்றார்கள்; (எ-று.) சந்திரன் எதிர்ப்பட்டவளவிலே கடல் பொங்குதல், இயல்பு. 'மதிகண்ட பெருங்கடல்' என்றவிடத்து 'கண்ட என்பது - காணாததைக் காண்பதுபோலச் சொன்ன மரபுவழுவமைதி. நகுலசகதேவர், மாத்திரியின் மக்களாயினும், குந்தியால் வளர்க்கப்பட்டதனாலும், குந்தியாலுபதேசிக்கப்பட்ட மந்திரத்தின்பலத்தால் மாத்திரியினிடம் பிறந்தவராதலாலும், 'குந்திமைந்தர்' எனஅடக்கப்பட்டனர். தேராட்கள் - தேர்க்காவலராய் நின்ற ஆட்களுமாம். விதிகொண்ட படை - பிரமனைத் தெய்வமாக்கொண்ட அஸ்திரம். படை- படுத்தற்குக் கருவியானது; படுத்தல்-அழித்தல்: ஐ-கருவிப்பொருள்விகுதி. இராவணனாற் கவர்ந்துபோகப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கிற செய்தியை அநுமான்சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான் வானரசேனையுடனே புறப்பட்டுச்சென்று கடற்கரையையடைந்து, கடலைக்கடக்கஉபாயஞ்சொல்ல வேண்டுமென்று வருணனைப்பிரார்த்தித்து அங்குத் தருப்பசயநத்திலே படுத்து ஏழுநாள் வரையில் பிராயோபவேசமாகக் கிடக்க, கடலரசனாகிய வருணன் அப்பெருமானது மகிமையை யறியாமல் உபேட்சையாயிருக்க, சக்கரவர்த்தித்திருமகனார் அதனைக்கண்டு கோபங்கொண்டு, வாநரர் நடந்துசெல்லும்படி கடலைவற்றச்செய்வே னென்று ஆக்கினேயாஸ்திரத்தைத்தொடுக்கத்தொடங்கவே, வருணன் அஞ்சிநடுங்கி யோடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நின்றானென்பது, இராமாயண கதை. (74) 75- துரியோதனன்சகுனிமுதலானாருடன் தருமனை யெதிர்த்தல். அவரளவோவரவுயர்த்தவரசன்றானுமாகுலத்தோடருஞ்ச மரிலரியேறென்னக், கவரிபுடைபணிமாறத்தவளக்கொற்றக்கவிகை |
|