தனனென்க. 'புன்தமையன்' என்றவிடத்து, தமையன் என்றது, வீமனுக்குத் துரியோதனன் முந்திப்பிறந்தவ னென்பதை விளக்கும்; வீமன் பிறந்த நாளுக்கு முதல்நாளிரவிற் பிறந்தவன் துரியோதனன். காணுதற்கரிய அப்போரின் மிக்கஉக்கிரத் தன்மையைவிளக்குவார் 'இன்றமையுஞ் சமர மினிக் காண்டல் பாவ மென்றிமையோ ரதி சயிப்ப' என்றார். ஆநிலன் - வாயுபுத்திரன்: அநிலன் - வாயு. 'பொர வந்தோர்' என்றவிடத்தில் 'போர்வேந்தர்' என்றும் பாடமுண்டு. (77) 78.-தம்பியர் இறந்ததற்குத்துரியோதனன் சோகமடைதல். செயகந்தன் செயவன்மன் செயசேனன்சே னாவிந்து செயத்திர தன்றிறலார் விந்து, வயமொன்று விக்கிரமனென்போராவி வானாடு புகுந்ததற்பின்மதங்களேழுங், கயமொன்று சொரிய வெதிர்நின்றதென்னக் களித்துவலம்புரி வீமன்முழக்கக் கண்டங், கயனின்றவலம்புரித்தா ரண்ணல் சோர்ந்தானநுசர் மேலன்பெவர்க்குமாற்றலாமோ. |
(இ -ள்.) செயகந்தன் - ஜயகந்தன், செயவன்மன் - ஜயவர்மா, செயசேனன் - ஜயஸேநன், சேனாவிந்து - ஸேநாவிந்து, செயத்திரதன் - ஜயத்ரதன், திறல் ஆர் விந்து - வெற்றிபொருந்திய ஜயவிந்து, வயம் ஒன்று விக்கிரமன் - சயம்பொருந்திய சயவிக்கிரமன், என்போர் - என்னும் ஏழுபேருடைய, ஆவி - உயிர், வான் நாடு புகுந்த தன்பின் - இறந்து வீரசுவர்க்கமடைந்த பின்பு,-கயம். ஒன்று - ஒரு யானை, மதங்கள் ஏழும் சொரிய - எழுவகைமதங்களும் பொழிய, எதிர் நின்றது என்ன - எதிரிலே நின்றது போல, வீமன்-, களித்து-களிப்படைந்து (எதிரில்நின்று), வலம்புரிமுழக்க- (வெற்றிக்குஅறிகுறியாகத் தனது) சங்கத்தை வாயில்வைத்து ஊதிஆரவாரிக்க, கண்டு - பார்த்து, அங்கு அயல் நின்ற வலம்புரி தார் அண்ணல்- அவ்விடத்தில் அருகிலே நின்ற நஞ்சாவட்டைப்பூமாலையணிந்த அரசனானதுரியோதனன், சோர்ந்தான் - மனந்தளர்ந்தான்: அநுசர்மேல் அன்புஎவர்க்கும் ஆற்றல் ஆமோ - தம்பியர்பக்கல் உள்ள அன்பு யாருக்கும்அடக்கமுடியுமோ? [முடியாது என்றபடி];
தம்பிமார் இறந்ததற்குத் துரியோதனன் சோகித்தா னென்ற சிறப்புப்பொருளை, தம்பியர்பக்கல் அன்பு யார்க்குந் தணிக்கலாகாது என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியதனால், வேற்றுப்பொருள் வைப்பணி. திறல் ஆர் விந்து - திறலென்னுஞ்சொல்லின் பொருள் கொண்டதொரு பரியாயநாமம் முந்தியமையப்பெற்ற விந்து வென்னும் பெயருடையா னென்க; இங்ஙனமே வயமொன்று விக்கிரமன் - வயமென்னுஞ்சொல்லின் பரியாயநாமம் முன் அமைந்த விக்கிரமனென்னும் பெயருடையா னென்க. வலம்புரிச்சங்கு இடம்புரியினும் ஆயிரமடங்குசிறந்ததாம். கவி பட்சபாதமில்லாமல் வீமன் துரியோதனன் என்ற இருவர்க்கும் வலம்புரி கூறுவார்போன்று சமத்காரத்தால் 'வலம்புரி வீமன்முழக்க, வலம்புரித்தாரண்ணல்' என்றார். முதலடியில் 'செயசேனன்சே னாவிந்து' எனச் சீர்பிரிக்க. மாற்றலாமோ என எடுத்து உரைத்தல்,மோனைக்குச் சிறவாது. (78) |