பக்கம் எண் :

66பாரதம்சல்லிய பருவம்

களைப்பிரயோகித்தற்கு உரிய வில்லின்திறத்தில் சிறந்து விளங்குகிற,
புலன்கள்போல்வார்ஐவர் இவர் - ஐம்புலன்கள்போல்
அடக்கவொண்ணாதவர்களானஇவ்வைந்துபேரும், யாவரையும் அடர்ப்பான்
வந்தோர்-எல்லோரையும்(போரில்) அழிக்க வந்து, சத்திரம் யாவையும் ஏவி-
ஆயுதங்களையெல்லாம்செலுத்தி, சங்கம்ஊதி - சங்கத்தை முழக்கி, நெடு
பொழுது சமர் விளைத்தார் -வெகுநேரம் போர்செய்து, (பின்பு), சமீரணன்தன்
புத்திரனால் -வாயுகுமாரனான வீமனால், முன் சென்ற எழுவரோடும் பொன்
உலகம் குடிபுகுந்தார்-முன்னேசென்ற ஏழு உடன்பிறந்தாருடனே தாங்களும்
பொன்மயமானவீரசுவர்க்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள் [இறந்தன
ரென்றபடி]; (எ - று.)

    அத்திரம்-அம்பு முதலிய கைவிடுபடை, சஸ்திரம்-வாள் முதலிய
கைவிடாப்படை யென்ப; இனி, மந்திரத்தோடு ஏவுவது - அத்திரம்; அஃது
இன்றிச் செலுத்துவது சத்திர மென்றும் கூறுப.  புலனைந்தும் பிராணிகளுக்கு
இன்றியமையாத உறுப்பாயிருத்தல்போலத் துரியோதனனுக்குத் தம்பியரைவர்
இன்றியமையாச் சிறப்பின ரென்பார்.  'புலன்கள்போல்வார்' என உவமை
கூறினார்.                                             (80)

81.-அதுகண்டு சீறித்துரியோதனன் போர் தொடங்கல்.

ஏற்றிடைவெங்கனனுழைந்ததென்னமுன்ன மெழுவருடன்றனக்
                            கிளையோரைவர்சேரக்,
கூற்றிடையேகுதலுமிகக்கொதித்துநாகக்கொடிவேந்தன்முடி
                               வேந்தர்பலருஞ்சூழ,
நாற்றிசையுமெழுந்துபெருங்கடலைமோதி நடுவடவைக்கனலவித்து
                                     நடவாநின்ற,
காற்றெனவே பாண்டவர்தம் முடலந்தோறுங்கணைமுழுக
                           வல்விசயங்காட்டினானே.

     (இ -ள்.) ஏற்றிடை - ஆயுதம்பாய்ந்த புண்ணிலே, வெம் கனல் -
கொடிய நெருப்பு, நுழைந்தது என்ன - நுழைந்ததுபோல, முன்னம்
எழுவருடன்- முன் (இறந்த) ஏழுதம்பிமாருடனே, தனக்குஇளையோர் ஐவர்-
தனக்குத்தம்பியரான வேறுஐவரும், சேர-ஒருசேர, கூற்றிடை ஏகுதலும் -
யமனிடத்திற்குச் சென்றவுடனே [இறந்தவுடனே], மிக  கொதித்து-
மிகவுஞ்சீற்றங்கொண்டு, நாகம் கொடிவேந்தன் - பாம்புக்கொடியையுடைய
துரியோதனராசன், முடிவேந்தர் பலரும் சூழ - கிரீடாதிபதிகளான
அரசர்கள்பலரும் (தன்னைச்) சூழ்ந்துவர, நால்திசையும் எழுந்து பெரு கடலை
மோதி நடுவடவை கனல் அவித்து நடவாநின்ற காற்று எனவே -
நான்குத்திக்குக்களிலும் (ஏககாலத்திற்) கிளம்பிப் பெரியகடலைத் தாக்கி
அதன்நடுவிலுள்ள படபாமுகாக்னியைத் தணித்துநடப்பதொருகடுங்காற்றுப்
போல[மிகவும்உக்கிரமாக], பாண்டவர்தம் உடலம் தோறும் கணை முழுகவில்
விசயம் காட்டினான் - பாண்டவர்களுடைய உடம்புகளிலெல்லாம் அம்புகள்
பாய்ந்து அழுந்தும்படி (தனது) விற்போர்த்திறத்தைக் காட்டினான்;

    சிறப்பாக அம்புகளைச் சொரிந்தன னென்பதாம்.
'மருமத்தினெறிவேல்பாய்ந்த புண்ணி லாம் பெரும்புழையிற் கனல்
நுழைந்தாலென," என்றதனோடு 'ஏற்றிடைவெங்கனல் நுழைந்ததென'
என்பதைஒப்பிடுக: இது, வருத்தத்தின்மேல் வருத்தம் விளைதற்கு உவமை. 
ஏறு என்பது- ஆயுதம்பாய்ந்த புண்ணாதலை 'வாளேறு',