'வேலேறு'என்பவற்றிலுங் காண்க: அதன்மேல் இடை - ஏழனுருபு. ஓர் - அசை. 'தம்பியரோரைவர்' என்றும்பாடமுண்டு. கடலினிடையிலே யுள்ள தொரு பெண்குதிரையின் முகத்தில் எப்பொழுதும் தீ மூண்டுஎரிகிற தென்றும், அது மழை நீர்முதலியவற்றால் கடல்நீர் மிகாதபடி அதனை உறிஞ்சிநிற்ப தென்றும் நூற்கொள்கை. 82.-சகதேவன்துரியோதனனையும், இவன்பக்கத்தார் அவன்பக்கத்தாரையும் வெல்லுதல். தன்கரத்தில் விற்றுணிய வேறோர் வில்லாற் சாதேவன்வலம் புரிப்பூந்தாமவேந்தன், வன்கரத்து மார்பகத்து முகத்துஞ்சேரவைவாளிகுளிப்பித்தான் மற்றுமற்று, முன்களத்து ளெதிர்ந்துள்ளோரிருசேனைக்கு முன்னெண்ணுந்திறலுடையோர் மூண்டுமூண்டு, பின்களத்தைச்சோரியினாற் பரவையாக்கிப் பிறங்கலுமாக்கினர் மடிந்தபிணங்களாலே. |
(இ -ள்.) தன் கரத்தில் வில் - தன் கையிலுள்ள வில், துணிய - (துரியோதனனெய்த அம்பினால்) துணிபட, வேறு ஓர் வில்லால் - வேறொரு வில்லைக்கொண்டு, சாதேவன் - சகதேவன், வலம்புரி பூ தாமம் வேந்தன் - நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனராசனது, வல் கரத்தும் - வலியகைகளிலும், மார்பு அகத்தும் - மார்பிலும், முகத்தும் - முகத்திலும், சேர -ஒருசேர, வை வாளி - கூரிய அம்புகளை, குளிப்பித்தான் - முழுகச்செய்தான்;மற்றும் மற்றும் - மேலும்மேலும், களத்துள் முன்எதிர்ந்துள்ளோர் -போர்க்களத்தில் முற்பட்டு எதிர்த்துள்ளவர்களான, இரு சேனைக்கும் முன்எண்ணும் திறல் உடையோர் - இரண்டுசேனைகளிலும் முதன்மையாய்எண்ணத்தக்க வல்லமையுடைய பாண்டவசேனையார், மூண்டு மூண்டு -மிகஉக்கிரங்கொண்டு, பின் களத்தை - பின்னிடும்படியான கௌரவசேனையுள்ள இடத்தை, சோரியினால் பரவை ஆக்கி - இரத்தப்பெருக்காற்கடலாகச்செய்து, மடிந்த பிணங்களால் பிறங்கலும் ஆக்கினர் - இறந்தஉடம்புகளால் மலைகளையும் உண்டாக்கினார்கள்;
பிறங்கலாக்கினர் - மலைபோலக் குவித்தன ரென்பதாம், முன்களம் - சகதேவன் சேனை, பின்களம் - துரியோதனன் சேனை. (82) 83.-பிறர் பின்னிட,துரியோதனன்தம்பியர் வீமனை யெதிர்த்தல். காந்துகனலுமிழ் சினவேற்கைக்காந்தாரர் காவலனாஞ் சகுனியுந்தன்கனிட்டனான, வேந்தனுமன்னவனுடன் பல்வேந்தரோடும் வெம்பனைக்கைப் பலகோடி வேழத்தோடும், ஏந்துதடம்புயச்சிகரி வீமன் றன்னோ டிகன்மலைந்து தொலைந் திரிந்தாரிவரை யல்லால், ஊர்ந்த மணிப்பணிக்கொடியோனிளைஞர்மீள வொன்பதின்மரவனுடன் வந்துடற்றினாரே. |
(இ -ள்.) காந்து - மூண்டெரிகிற, கனல் - நெருப்பை, உமிழ் - வெளிப்படுத்துகிற, சினம் - உக்கிரத்தன்மையையுடைய, வேல்-வலையேந்திய, கை - கையையுடைய, காந்தாரர் காவலன் ஆம் சகுனி |