2.-சூரியோதயவருணனை. சிதையத்தன் மைந்தனை யடுந்தன்மைகண்டுமொரு செயலின்றி நீடு துயர்கூர், இதயத்தனாகியகல்பகலோன் மறித்தவுணரெதிரஞ்சுமாறு பொருதான், உதயத் தடங்கிரியு மொளிர்பற்பராககிரியொப்பாக வீசுகதிரிற், புதையப்பரந்தவகலிருளுந்துரந்துரகர்புவனத்தினூடுபுகவே. |
(இ -ள்.) தன் மைந்தனை - தனது குமாரனான கர்ணனை, சிதைய - அழியும்படி, அடும் - (அருச்சுனன்) கொன்ற, தன்மை - தன்மையை, கண்டும் - பார்த்தும், ஒரு செயல் இன்றி - (அதற்குப் பரிகாரமாகத் தான் செய்யத்தக்க)ஒரு செயல் இல்லாமல், நீடு துயர் கூர் - பெருந்துன்பம் மிக்க, இதயத்தன்ஆகி - மனத்தையுடையவனாய், அகல்-நீங்கிச்சென்ற, பகலோன்- சூரியன், வீசுகதிரின்-வெளிவீசுகிற (தனது) கிரணங்களால்,-தடஉதயம் கிரியும் - பெரியஉதயபருவதமும், ஒளிர் பற்பராக கிரி ஒப்பு ஆக - விளங்குகிறபதுமராகரத்தினமயமான தொருமலைபோலாகவும்,-புதைய பரந்த அகல்இருளும் - (நிலவுலகம்) மறையும்படி பரவிய மிக்க இருட்டும், துரந்து- துரத்தப்பட்டு, உரகர் புவனத்தினூடுபுக - நாக சாதியாரது பாதாளலோகத்தினுட்செல்லவும்,-மறித்து - மீண்டுவந்து, - அவுணர் எதிர் அஞ்சும் ஆறுபொருதான் - அசுரர்களெதிரிலே (அவர்கள்) அஞ்சும்படி போர்செய்தான்; (எ- று.)
பதினேழாநாட்போரில்தன்மகனை அர்ச்சுனன் கொன்றதைத்தான் பிரதியக்ஷமாகப்பார்த்திருந்தும் அதற்கு யாதொன்றும் எதிர் செய்யும்விதமில்லாமல் புத்திரசோகத்தோடு மறைந்துசென்ற சூரியன், மறுநாளுதயத்தில், மிக்கவிளக்கத்தோடுகூடி, தனக்குத் தொன்றுதொட்டுப் பகையாகவுள்ள இருளைத்தனதுஒளியால் அழித்துக்கொண்டும், என்றுந்தீராப்பகைவரான மந்தேகரென்னும் அசுரரை அஞ்சுவித்து எதிர்த்துக்கொண்டும்வந்து சேர்ந்தனன் என்பதாம். "வினைவலியுந் தன்வலியும் மாற்றான்வலியும், துணைவலியுந்தூக்கிச் செயல்" என்றபடி தன்வலிமையையும் எதிரிகள் வலிமையையுஞ் சீர்தூக்கிப்பார்த்து, எதிரிகளின் வலிமை மிக்கிருந்ததாயின் தான் அடங்கியொழிதலும், தன்வலிமை மிக்கிருந்ததாயின் மிக்க ஊக்கத்தோடு எதிர்த்துச்சென்று பொருது பகைவெல்லுதலும் ஆகிய இராசதருமத்தைச் சூரியன்மேலேற்றிக் கூறினரென்க. மந்தேகாருணமென்னுந் தீவில்வாழும் அரக்கர்கள் உக்கிரமானதவத்தைச்செய்துபிரமனிடத்துவரம்பெற்று அதனாற் செருக்கி எப்பொழுதுஞ்சூரியனைவளைந்துஎதிர்த்துத் தடுத்துப் போர் செய்கின்றன ரென்றும், அந்தணர்கள்சந்தியாகாலங்களில் மந்திர பூர்வமாகக் கையிலெடுத்துவிடும்அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம் போலாகி அவர்கள்மேல் விழுந்துஅவர்களை அப்பால்தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடிசெய்கின்றனவென்றும், அப்படி அந்தணர்கள் செலுத்தும் அர்க்கியத்தின்ஆற்றலால் சூரியமண்டலத்தின் இடையேஒரு செந்தீ எழுந்து சொலிக்கஅத்தீயில் அவ்வசுரர்கள் விழுந்து ஒழிகின்றன ரென்றும் நூல்கள் |