பக்கம் எண் :

70பாரதம்சல்லிய பருவம்

86.-அதனாற் சோகித்ததுரியோதனனுக்குச் சகுனி
தைரியங்கூறல்.

தனக்கிளையோர்தொண்ணூற்றொன்பதின்மர்தாமுஞ் சயவீமன்
                             சரத்தாலுந் தண்டினாலுங்,
கனக்குடிலிற் குடியேறக்கண்டுகண்டு கைசோரமெய்சோரக்
                                      கண்ணீர்சோர,
எனக்குறுதியுரைத்தவர் தம்முரைகேளாமலென்செய்தேனெனப்
                             பொருளுமிழந்தேனென்று,
மனக்கவலையுறுமன்னன் றன்னை நோக்கி மாமனுமற்றொரு
                            கோடிமாற்றஞ்சொன்னான்.

     (இ -ள்.) தனக்கு இளையோர் தொண்ணூற்றொன்பதின்மர் தாமும் -
தனது தம்பிகள் தொண்ணூற்றொன்பது பேரும், சயவீமன் -
வெற்றியையுடையவீமனது, சரத்தாலும் - அம்புகளாலும், தண்டினாலும் -
கதையினாலும், கனம் குடிலில் குடி ஏற - மேகங்களுக்குமேலுள்ளதான
வீரசுவர்க்கத்திற்சென்றுசேர, கண்டு கண்டு - பார்த்துப் பார்த்து, (அதனால்)
கைசோர - கைகள் சோர்வடையவும், மெய் சோர - உடம்பு சோர்வடையவும்,
கண் நீர் சோர - கண்ணீர்வழியவும், 'எனக்கு உறுதி உரைத்தவர்தம் உரை
கேளாமல் - எனக்கு நன்மொழி கூறினவர்களது வார்த்தையைக்கேட்டு
அதன்படி நடவாமல், என் செய்தேன் - என்ன காரியஞ்செய்தேன்? எ
பொருளும் இழந்தேன் - எல்லாப்பொருள்களையும் இழந்துவிட்டேனே,'
என்று- என்று கழிவிரக்கங்கொண்டு, மனம் கவலை உறும் - மனத்திற்
கவலையடைந்த, மன்னன் தன்னை நோக்கி - துரியோதனராசனைப் பார்த்து,
மாமனும் - மாமனான சகுனியும், மற்று-பின்பு, ஒருகோடி மாற்றம் சொன்னான்
- ஒருகோடி வார்த்தைகளை (த்தேறுதலாக)க் கூறுபவனானான்; (எ - று.)-
அவற்றில் இரண்டொன்றை அடுத்த கவிகளிற் காட்டுகிறார்.

    மேலுலகிலுள்ள தங்குமிட மென்ற பொருளை 'கனக்குடில்' என்ற
சொல்லால் விளக்கினார்; (வீரசுவர்க்கத்துப்) பொன்மயமான குடிசை என்றலும்
ஒன்று.  உறுதியுரைத்தவர் - வீடுமன் துரோணன் விதுரன் கண்ணன்
முதலியோர் பற்பலர்.  ஒன்பது + பத்து - தொண்ணூறு: "ஒன்பதனொடு
பத்தும்" என்னுஞ் சூத்திர விதி.                                (86)

வேறு.

87.-இதுவும், அடுத்த கவியும்- சகுனி துரியோதனனுக்குத்
தைரியங் கூறுதல்.

அருகு சாயை போல்வாழு மனுசர்யாரும் வானேற
உருகி மாழ்கி நீசோக முறினுமீள வாரார்கள்
மருக வாழி கேள் போரின்மடிவு றாத பூபாலர்
முருக வேளை யேபோல்வர் முரணறாத கூர்வேலோய்.

மூன்று கவிகள் - ஒருதொடர்.

(இ - ள்.) அருகு - (உனது) அருகிலே, சாயை போல் - நிழல் போல,
வாழும் - பிரியாதுவாழ்ந்திருந்த, அனுசர் யாரும் - தம்பிமா