பக்கம் எண் :

8பாரதம்சல்லிய பருவம்

கூறும். 'அவுணரெதி ரஞ்சுமாறு பொருதான்' என்றது, அந்தணர்கள்
அர்க்கியப்பிரதாநஞ்செய்ய அதன்வல்லமையால் தன்னிடத்து எழுந்து
விளங்கும்பெரியசுவாலையைக் கண்டு அசுரர்கள் அஞ்சத் தோன்றின
னென்றவாறு. தனது மிகச் சிவந்த கிரணங்கள் மிகுதியாக அடுத்துப்
பரவுதலால்உதயபருவதம் மிகச்செந்நிறமடைந்து சிவந்தபதுமராகரத்தின
மலைபோலாகவென்பது, மூன்றாமடியின் கருத்து.

     பதுமராகமென்றஇரத்தினப்பெயர் - செந்தாமரை போலுஞ்
செந்நிறமுடையதெனக் காரணப்பொருள்படும்.  துரந்து -
செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை.             (2)

3.-துரியோதனன் இரவிலே ஆலோசித்தமையும்உதயத்தில்
சூரியனைத்தொழலும்.

கண்டுஞ்சலின்றியிரவிருகண்ணிலான்மதலைகண்ணீரின்
                                மூழ்கியெவரைக்,
கொண்டிங் கெடுத்தவினை முடிவிப்பதென்றுயர்சகுனியோடு
                            மெண்ணியிருள்போய்,
உண்டுஞ்சுகித்துமலர்மதுவொன்றுசாதிமுதலொண்போது
                                 விட்டுஞிமிறும்,
வண்டுஞ்சுரும்புமரவிந்தத்தடத்துவர வருவோனைவந்தனை
                                    செய்தான்.

     (இ -ள்.) இரு கண் இலான் மதலை - இரண்டுகண்களுமில்லாத
(பிறவிக்குருடனான) திருதராட்டிரனது புத்திரனாகிய துரியோதனன்,-கண்
நீரில்மூழ்கி - (தனதுபிராணசிநேகிதனான கர்ணன் இறந்ததனாலாகிய
சோகத்தாற்)கண்ணீர்வெள்ளத்திலே முழுகி, இரவு - இராத்திரி முழுவதும்,
கண் துஞ்சல்இன்றி - கண்மூடித்தூங்குதலில்லாமல், உயர் சகுனியோடும் -
(சதியாலோசனையிற்) சிறந்தசகுனியுடனே, இங்கு - இப்போது,எவரைக்
கொண்டு-, எடுத்தவினை - (பகைவரையொழிக்கவேணும் என்று)
மேற்கொண்ட செயலை, முடிப்பது - நிறைவேற்றுவது, என்று எண்ணி -
என்றுஆலோசித்து,-(பின்பு), இருள் போய் - இருட்டு நீங்க,- ஞிமிறுஉம்
வண்டு உம்சுரும்புஉம் - பலசாதிவண்டுகளும், உண்டும் சுகித்தும் மலர் -
(தாம்தேனைக்)குடித்தும் இனிமையாகத்தங்கியும் மகிழ்தற்கிடமான, மது
ஒன்று -தேன்பொருந்தின, சாதிமுதல் ஒள் போது - ஜாஜீமுதலிய
சிறந்தமலர்களை,விட்டு - நீங்கி, அரவிந்தம் தடத்துவர - தாமரைத்
தடாகங்களிலேவந்துசேரும்படி, வருவோனை - உதிப்பவனான சூரியனை,
வந்தனைசெய்தான்- நமஸ்கரித்தான்; (எ - று.)

     கீழ்ச்சருக்கத்தின்முடிவில் "பைவரு மாசுணத் துவசப் பார்த்திவனைக்
கொண்டே தம்பாடி புக்கார், தைவருதிண்சிலைத்தடக்கைச் சகுனிதனை
முதலான தரணிபாலர்" என்று கூறினவர் அவ்விரவு முழுவதும்
வருத்தத்தாலும்கவலையாலுந் தூங்காமல் துரியோதனன் சகுனியோடு
ஆரைச் சேனாபதியாகக்கொண்டுபகை வெல்லும்செயலை முடிப்பதென்று
ஆலோசனைசெய்திருந்துஇரவு கழியுமளவில் சூரியனுதிக்கக்கண்டு
வணங்கினமையை இதிற்கூறினார்.ஒருவர் செல்வமுடையராயிருந்த காலத்தில்
அவரிடஞ்சேர்ந்து அவரன்னத்தையுண்டு அவர்பக்கல் இனிது வாழ்ந்திருந்து