உனக்குஉடன்பிறந்த முறையை யடைந்த நான் மணஞ்செய்தல் தருமமன்று' என்றுகூறி மறுத்துவிட, அவள் கோபங்கொண்டு 'உனக்குச் சஞ்சீவிநிவித்தை பலிக்காமற்போகக்கடவது' என்று சபிக்க, இவனும் 'அதருமமாகக் காமத்தாற் கோபித்து என்னைச்சபித்த உன்னை முனிவனெவனும் மணஞ்செய்யாதொழிக; எனக்கு அவ்வித்தை பலிக்காமற்போயினும் என்னிடங்கற்றுக்கொள்வார்க்கு அது பலிக்காமற்போகாது' என்று கூறிவிட்டுத் தேவலோகஞ் சென்றான். பின்புகசனிடம் தேவகுருவான பிருகஸ்பதியும் தேவர்களும் அம்மந்திரத்தை உபதேசம்பெற்று மீண்டும் அசுரரை யெதிர்த்து வெல்வாராயினர். அம்மந்திரத்தைப் பிற்காலத்தில் தேவர்களிடமிருந்து முனிவர்கள் தெரிந்துகொள்ள, ஒருமுனிவனிடமிருந்து துரியோதனன் பெற்றன னென வரலாறு உணர்க. இச்செய்யுளில் 'விரகொடுகைக்கொண்டு' என்றதன் விவரம், கீழ்க்காட்டியவாற்றால் வெளியாம். மூன்றாம் அடியில் 'பயமுற' என்றது, அம்மந்திரம் கசமுனிவனிடம் பயன்படாது நின்றமையைக் குறிப்பிக்கும்.(101) 102. | அந்நெடுமாமறையாலமரத்திடையழிசேனை இன்னுயிர்பெற்றிடும்வகைகொடுமீளவுமிகல்வேனென்று உன்னியுளந்தெளிவுற்றொருவர்க்குமிஃதுரையாதே தன்னொருவெங்கதையோடுதராபதிதனிசென்றான். |
(இ -ள்.) அ நெடு மா மறையால் - அந்தச் சிறந்த மகாமந்திரத்தின் வலிமையால், அமரத்திடை அழி சேனை இன் உயிர் பெற்றிடும் வகை கொடு -போரில் அழிந்த (எனது) சேனைகள் யாவும் இனியஉயிரைப்பெற்றெழும்படிசெய்துகொண்டு, மீளவும் இகல்வேன் - மறுபடியும் போர்செய்வேன், என்று -,உன்னி - எண்ணி, உளம் தெளிவு உற்று - மனம்தேறி, ஒருவர்க்கும் இஃதுஉரையாதே - ஒருவர்க்கும் இக்கருத்தைக் கூறாமலே, தன் ஒரு வெம்கதையோடு - தனது ஒரு கொடிய கதாயுதமாத்திரத்துடனே, தராபதி -பூமிக்குத்தலைவனான துரியோதனன், தனிசென்றான்-தனியே போனான்;(எ -று.) வீமன்போலத் தானும் கதாயுதவுரிமையுடையவனாதலால், பின்பு அவனோடு போர்செய்தற்கு உபயோகப்படுமாறு தனதுகதையைக்கையிற் கொண்டே சென்றா னென்க. (102) 103.-சென்ற துரியோதனன்ஒருகுளத்தின் நீரினுள்ளே முழுகுதல். தூயநலந்தருகங்கையெனப்பலசுரருந்தோய் பாயதடந்தனின்மூழ்கினனம்மறைபயில்வேனென்று ஆயுமனங்கொடுசேவடிமுன்பினதாவேகிச் சேயவன்வெண்டிரைவாரியின்மூழ்கியசெயலொத்தான். |
|