பக்கம் எண் :

84பாரதம்சல்லிய பருவம்

-நல் நாளம்மூலம் நளினத்தைமலர்த்தி - நல்ல நாளத்தோடுகூடிய
(எல்லாவற்றுக்கும்) மூலாதாரமான (தனது இதயத்) தாமரையை மலரச்செய்து,-
நாவால் - நாக்கினால், உன்னாமல் உன்னும்முறை மந்திரம்ஓதினான் -
வெளிப்படையாக உச்சரியாமல் அந்தரங்கமாக ஜபஞ்செய்யும்
முறைமையையுடைய மந்திராட்சரத்தை ஜபித்தான்;

    சிரத்திற் பிங்கலை யிடை நாடிகளுக்குநடுவே புருவமத்தியிலே சிந்தும்
அமுதத்தை யோகவகையால் உட்கொண்டு அதனால் உடம்பின் தாபம்
ஒழியும்இயல்பை 'தன்னாகமுற்றுமெலிவின்றித்தயங்குமாறு' என்பதனாற்
குறித்தார்;இதயம் தாமரைமலர்வடிவானதொரு மாம்சாகாரமாய் இருத்தலாலும்,
அம்மனம்எல்லாச் செயல்களுக்கும் முக்கிய காரணமாதலாலும் 'மூலநளினம்'
எனப்பட்டது.  நாளம்-உள்துளையுள்ள பூந்தண்டு; இது நளினத்துக்கு
அடைமொழி.  குவிந்துகவிந்துள்ள இதயகமலத்தைநிமிர்த்து மலரச்செய்ய
வேண்டுதலால், 'நளினத்தை மலர்த்தி' என்றார்.  முதலடியால், இவன் இன்று
புதுமையாக யோகஞ்செய்யத் தொடங்கினாலும் அதனை மரபுமுறைபிறழாமல்
ஒழுங்குபடச்செய்த அருமையைத் தெரிவித்தார்.  உன்னாமலுன்னுதல் -
ஒலிவெளிப்படாதபடி அகத்திலே ஜபித்தல்.  யோகம் - சிலநியமங்களோடு
செய்யுந் தவம்.  இனி, தன்னாகமுற்றும்....மலர்த்தி - தனது தேகத்தினுள்,
முற்றிலும் வாட்டமின்றிவிளங்கும் ஆறு வகையான நல்லநாளத்தையுடைய
மூலாதாரம் முதலான ஆதாரநளினங்களை மலரச்செய்து; இனி,
ஆதாரமலர்களைமலர்த்தி எனவே, அவற்றி னரும்பொருளையுணர்ந்து
மேற்சென்று பிரமரந்திரத்தில் சகஸ்ரதளதாமரையை மலரப்பண்ணி,
அதிலிருக்கிற சந்திரமண்டலத்தின் அமிருதத்தை மூலாக்கினியாலிளகப்பண்ணி
அதனைச் சர்வநாடி வழியாக உடலிலே நிரப்பி அதனாலாகிய சுகோதயத்தால்
பூரணசோதனையைப் பாவித்து எனப்பொருள் விரிப்பர் ஒருசாரார்.   (105)

106.-முன்பு சோழனுக்குமுதுகிட்ட வீரர்களின் நிலைமை.

இதயஞ்சிறிதுங்கலங்காதவிறைவனிவ்வாறு
உதகந்தனிற்புக்குயர்மந்திரமோதும்வேலை
மதவெங்கயப்போர்வளவற்குமுதுகுதந்த
விதமண்டலீகர்புலிகண்டமிருகமொத்தார்.

     (இ -ள்.) இதயம் சிறிதும் கலங்காத - (எப்படிப்பட்ட ஆபத்திலும்)
மனம் சிறிதுங் கலங்குதலில்லாத, இறைவன் - துரியோதனராசன், இஆறு -
இப்படி, உதகந்தனில் புக்கு - நீரிலே புகுந்து, உயர் மந்திரம் ஓதும்
வேலை -சிறந்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருக்கும்பொழுது,-மதம்  -
மதத்தையுடைய,வெம் - கொடிய, கயம் - யானையையும், போர் -
போர்வல்லமையையுடைய,வளவற்கு - சோழனுக்கு, முதுகு தந்த -
புறங்கொடுத்த, விதம் மண்டலீகர் -பலவகைப்பட்ட அரசர்கள், புலிகண்ட
மிருகம் ஒத்தார் - புலியைக் கண்டுஅஞ்சியோடும் மான்போன்றார்கள்;
(எ - று.)-உவமையணி.