இக்கவி - கீழ் 95, 96-ஆம் கவிகளின் தொடர்ச்சியுடையது. வளவன்- மிக்கவளமுடையவன். (106) 107.-அசுவத்தாமன்முதலியோர் வந்து சகுனியிறந்தமை காணுதல். பரபாவகமாம்பரித்தாமனும்பாய்பரித்தேர்க் கிருபாரியனுங்கிருதப்பெயர்க்கேடிலோனும் ஒருபாலிறைகொண்டொழிசேனையுந்தாமுமீண்டு பொருபாரதப்போர்புரிசௌபலன்பொன்றல்கண்டார். |
(இ -ள்.) பர பாவகம்ஆம் - பகைவர்களுக்கு அக்கினிபோன்றவனான, பரித்தாமனும் - அசுவத்தாமாவும், பாய் பரி தேர் - பாய்ந்து செல்லுங் குதிரைகள் பூண்ட தேரையுடைய, கிருப ஆரியனும் - கிருபாசாரியனும், கிருதன் பெயர் - கிருதவர்மனென்னும் பெயரையுடைய, கேடு இலோனும் - அழிவில்லாத அரசனும், (ஆகிய இவர்கள்),- ஒரு பால் இறை கொண்டு - ஒருபக்கத்தில் ஒதுங்கித் தங்கி, ஒழி - இறவாது நின்ற, சேனையும் - சேனைகளும்,தாமும் - தாங்களுமாக, மீண்டு - திரும்பிவந்து, பொரு பாரதம் போர் புரிசௌபலன் பொன்றல் கண்டார் - தாக்கிச் செய்த பாரதயுத்தத்தைமூட்டிவிட்டவனான சகுனி இறந்துகிடத்தலைப் பார்த்தார்கள்; (எ - று.) பரபாவகமாம் பரித்தாமன் - அகப்பட்ட பொருள்களைத் தீ அழித்தல் போலப் பகைவர்களைத் தவறாமல் அழிக்கும் அசுவத்தாமனென்க. பரபாவகம் - பரர் - பிறர், பாவகம் - பரிசுத்தமாகச் செய்வது. தேவர்களை இருதிணையாலுஞ் சொல்லலாமாதலால், 'பாவகம்' என்று அஃறிணையாகக்கூறினார். இனி, 'பரபாவகமாம்' என்பதற்கு - பரம்பொருளினிடத்தில் மனஞ் செலுத்துதலையுடைய என்று உரைப்பாரு முளர்.பாவகம் - பாவனை. ஒரு பால் இறை கொண்டொழி சேனை - ஏதோஒருமூலையில் ஓடிப்பதுங்கிக்கிடந்து அரிதில் உயிர்தப்பிய சிறுசேனை யென்க.இறை - இறுத்தல்; தங்குதல். துரியோதனனுக்குப் பலசமயங்களிற் பலவகையாகத் துர்ப்போதனை செய்து மகாபாரத யுத்தத்தை மூட்டி விட்டவனாதலால், சகுனியை 'பொருபாரதப் போர்புரி' என்றது. (107) 108.-கண்ட அவர்கள்கலக்கமும் வியப்பும் அடைதல். கண்டார்மிகவும்பரிவோடுகலக்கமுற்றார் தண்டாரகைதோய்விசும்பொத்தசமரபூமி கொண்டான்முரசக்கொடியோனெனக்கோபமிஞ்சி விண்டார்மிகவும்வியந்தாரவர்வீரமம்மா. |
(இ -ள்.) (கீழ்க்கூறியவர்கள்), கண்டார் - (சகுனியிறந்ததைக்) கண்டு, பரிவோடு கலக்கம் மிகவும் உற்றார் - விசனத்தையுங் கலக்கத்தையும் மிகுதியாக அடைந்தார்கள்; தண் தாரகை தோய் - குளிர்ச்சியான (ஒளியையுடைய) நக்ஷத்திரங்கள் நிறைந்த, விசும்பு - ஆகாயத்தை, ஒத்த - போன்ற, சமரபூமி - யுத்தகளத்தை, முரசம் கொடி |