வீரனானஅருச்சுனனுடன், நால்வரும் - மற்ற நான்கு பாண்டவர்களும், (ஆக ஐவரும்), சேர - ஒருசேர, என் கை மூரி வெம் கணைகளாலே - எனது கையாலெய்யப்படும் வலிய கொடிய அம்புகளாலே, முடி தலை துணிவர் - கிரீடத்தையணிந்த தங்கள்தலை அறுபடுவார்கள்; (எ - று.) - கண்டாய் - தேற்றம். இதுவும், அடுத்தகவியும் - அசுவத்தாமனொருவனது வார்த்தை. என்னிடத்து நம்பிக்கை வைத்து என்னை நீ சேனாபதியாக்காததனால் இப்படிப்பட்ட எனது திறமையை யான் காட்டுதற்கு இடமில்லாமற் போயிற்றென்பது, உட்கோள். இப்படிப்பட்ட திறமை அசுவத்தாமனுக்கு இருத்தலை, "ஆசாரியன் புதல்வ னச்சுவத்தார்கோமாற்குச், சேனாபதிப்பட்டஞ்சேர்த்தினால் - மீதவனை, வெல்லப் போர்செய்வகைக்கு வெண்டலையிலூணுகந்த, செல்வற்குந் தானரிதே செப்பு" என்ற பெருந்தேவனார்பாரதத்தாலும்அறிக. "தோன்றாதோற்றித் துறைபலமுடிப்பினுந், தான்தற்புகழ்தல்தகுதியன்றே"என்ற பொதுவிதிக்கு, 'தன்னுடைஆற்றலுணராரிடையில் தன்னைப்புகழ்தலுந்தகும் வல்லோர்க்கு' என்ற விலக்கு உள்ளதனால், 'வீரியம் விளம்பல் போதாதுஆயினும் விளம்புகின்றேன்' என்றான்; இனி, என்திறமை சொல்லிமுடியுந்தரத்ததன்று, ஆயினும் ஒருவாறு சொல்லுகிறே னென்றும்பொருள்கொள்ளலாம். 'யான் அவர்கள் தலையைத்துணிப்பேன்' என்றுவினையைத் தன்மேலேற்றாமல் 'அவர்கள் தலைதுணிபடுவார்கள்' என்றுஅவர்கள்மேல் ஏற்றிக் கூறியது, அலட்சியத்தைக் காட்டும். (118) 119.-அசவத்தாமன் செய்தசபதம். எல்லவன்வீழுமுன்னம்யாரையுந்தொலைத்துவேலைத் தொல்லைமண்ணளித்திலேனேற்றுரோணன்மாமதலையல்லேன் வில்லெனும்படையுந்தீண்டேன்விடையவன்முதலோர்தந்த வல்லியகணையும்பொய்த்தென்மறைகளும்பொய்க்குமாதோ. |
(இ -ள்.) எல்லவன் வீழும் முன்னம் - சூரியன் அஸ்தமித்தற்கு முன்னே, யாரையும் தொலைத்து - பகைவர்களெல்லோரையும் ஒழித்து, வேலைதொல்லை மண் - கடல்சூழ்ந்த பழமையான நிலவுலகமுழுவதையும், அளித்திலேன்ஏல் - (உனக்கு நான்) கொடேனாயின், (யான்), துரோணன் மா மதலை அல்லேன் - துரோணனது சிறந்த குமாரனல்லேன்; (அன்றியும்), வில் எனும் படையும் தீண்டேன் - வில்லென்ற ஆயுதத்தையும் தொடேன்: (மேலும்),விடையவன்முதலோர் தந்த - விருஷபவாகனத்தையுடைய சிவபிரான்முதலானதேவர்கள் (எனக்குக்) கொடுத்துள்ள, வல்லிய கணையும் - வலிய அம்புகளும்,பொய்த்து - வீணாய்விட, என் மறைகளும் பொய்க்கும் - எனக்குரியவேதங்களும் பொய்யாய்விடும்; (எ - று.)-வல்லிய - வலிய என்பதன் விரித்தல். பொய்த்து - பொய்க்கவென எச்சத்திரிபு. (119) |