120. | மோதுமோகரப்போர்வென்றுமுடித்துமோவொன்றிலொன்றிற் சாதுமோவிரண்டுமல்லாற்றரணிபர்க்குறுதியுண்டோ யாதுமோதெளிதிநின்போலேற்றமுள்ளவர்க்கிவ்வாறு போதுமோபூண்டபூண்டபுகழெலாம்போய்விடாதோ. |
(இ -ள்.) ஒன்றில் - ஒருபக்ஷத்தில், மோதும் மோகரம் போர் - தாக்கிச்செய்யும் உக்கிரமான யுத்தத்தில், வென்று முடித்துமோ (பகைவரைச்) சயித்துஒழிப்போமோ? (அன்றி), ஒன்றில் - மற்றொரு பக்ஷத்தில், சாதுமோ - (அப்போரிற் பகைவரால் அடிபட்டு) இறப்போமோ? இரண்டும் அல்லால் - இவ்விரண்டுவிதமு மல்லாமல், தரணிபர்க்கு - அரசர்களுக்கு, உறுதி உண்டோ- துணியத்தக்க விதம் வேறுஉளதோ? [இல்லை யென்றபடி]; யாதுமோ தெளிதி- [இவ்விரண்டுவிதத்தில்] எதையாயினும் ஒன்றை நிச்சயிப்பாய்; நின்போல்ஏற்றம் உள்ளவர்க்கு - உன்னைப்போல மேன்மை யுள்ளவர்களுக்கு, இ ஆறுபோதுமோ - (ஓடியொளிதலாகிய) இந்தவிதம் தகுமோ? [தகாதுஎன்றபடி];பூண்ட பூண்ட புகழ் எலாம் - (நீ இதுவரையிலும்) அழகிதாக மிகவும்அடைந்த கீர்த்திமுழுதும், போய் விடாதோ - அழிந்துபோய்விடாதோ? (எ -று.) -புகழெலாம் போய்விடாதோ - ஒருமைப்பன்மைமயக்கம், போய் விடாதோ - போய்விடுமன்றோ; இரண்டு எதிர்மறை உடன்பாடு உணர்த்தித் தேற்றத்தை விளக்கும். (120) 121. | பாண்டவர்முடியவென்றிப்பாரெலாமுனக்கேதந்தால் மாண்டவர்தம்மைநின்வாய்மறைமொழிதன்னைக்கொண்டு மீண்டவராக்கிப்பின்னைவேறொருபகையுமின்றி ஆண்டவரிவரேயென்னத்துணைவரோடாளலாமே. |
(இ -ள்.) பாண்டவர் முடிய வென்று - பாண்டவர் இறக்கும்படி (அவர்களைச்) சயித்து, இ பார் எலாம் உனக்கே தந்தால் - இந்தப்பூமிமுழுவதையும் உனக்கே (நாங்கள்) கொடுத்தால், (அதன்பின்பு நீ), மாண்டவர் தம்மை நின்வாய் மறைமொழிதன்னை கொண்டு மீண்டவர் ஆக்கி- (போரில்) இறந்த உன்பக்கத்தவரையெல்லாம் உனது வாயிலுள்ள வேதமந்திரத்தால் பிழைத்தவராகச்செய்து, பின்னை பிறகு, வேறு ஒரு பகையும்இன்றி ஆண்டவர் இவரே என்ன - ஒரு பகையுமில்லாதபடி (உலகத்தை)அரசாண்டவர் இவர்களேயென்று (கண்டோர்) கொண்டாடும்படி, துணைவரோடுஆளல்ஆமே-(உனது)தம்பிமார்களுடன் கூடி அரசாட்சி செய்யலாமே; (எ -று.) நின்வாய் மறைமொழி - உனக்குச் சுவாதீனமாய்த் தெரிந்துள்ள இரகசியமான மந்திர மென்க. மாண்டவர், மாள் - பகுதி. (121) 122.-அவைகேட்டுஞ் சலியாமல்துரியோதனன் தவநிலைநிற்றல். என்றிவைபோல்வபன்னூறியம்பவுமிராசராசன் ஒன்றினுங்கவலைசெல்லாவுணர்வுடையுளத்தனாகி |
|