அன்றிகல்வருணன்கூறுமாகுமென்றறிஞர்சொல்லத் துன்றியவடிவத்தோடுமடங்கினான்றோயத்தூடே. |
(இ -ள்.) என்று இவை போல்வ - என்ற இவைபோல்வனவாகிய, பல் நூறு - பலநூறுவார்த்தைகளை, இயம்பவும் - (அசுவத்தாமன் முதலியோர்) கூறவும், இராசராசன் - அரசர்க்கரசனான துரியோதனன், ஒன்றினும்கவலை செல்லா உணர்வு உடை உளத்தன் ஆகி - ஒருவிஷயத்திலும் கவலை செல்லாத அறிவையுடைய மனத்தையுடையவனாய், அன்று - அப்பொழுது, இகல் வருணன் கூறுஉம்ஆகும் என்று அறிஞர் சொல்ல - வலிமையுடைய வருணனது அமிசமுமாவன் இவனென்று அறிவுடையார் சொல்லும்படி, துன்றியவடிவத்தோடும் தோயத்தூடே அடங்கினான் - பொருந்திய வடிவத்துடன்நீரினுள்ளே ஒடுங்கியிருந்தான்; (எ - று.) வேறுபாடுதோன்றாதபடி யாதொரு துன்பமுமின்றி நீரில் ஒன்றி நின்றனனென்பார், இங்ஙனங்கூறினார்; 'வருணன் கூறுமாகும்' என்ற உம்மை -திருமாலினமிசமேயன்றி என்றபொருளைத் தருதலால், இறந்தது தழுவிய எச்சம்:அரசன், திருமாலின் அம்சமென்பது, நூல்களில் பிரசித்தம். வருணன் -மேற்குத்திக்குப்பாலகன்; நீர்க்கடவுள். மடங்கினான் என்றும் பதம்பிரிக்கலாம். (122) 123. பின்பு அசுவத்தாமன்முதலியோர் மீளுதல். உரைத்தனவுரைகட்கெல்லாமுத்தரமுரைசெய்யாத வரைத்தடந்தோளானெஞ்சின்வலிமையைவலிதினெண்ணி நிரைத்தவெங்கதிர்கொள்வாளிநெடுஞ்சிலைத்துரோணன்மைந்தன் விரைத்தொடைக்கிருதனோடுமாதுலனோடுமீண்டான். |
(இ -ள்.) உரைத்தன உரைகட்கு எல்லாம் - (இவ்வாறு) சொன்னவையான வார்த்தைகளுக்கெல்லாம், உத்தரம் உரை செய்யாத - மறுமொழி கூறாத, வரை தட தோளான் - மலைபோன்ற பெரிய தோள்களையுடைய துரியோதனனது, நெஞ்சின் வலிமையை - மனத்தின் உறுதியை, வலிதின் எண்ணி - நன்றாகநினைத்து,- நிரைத்த - வரிசைப்பட்ட, வெம் - கொடிய, கதிர் கொள்வாளி-கூர்நுனியைக்கொண்ட அம்புகளை யெய்கிற, நெடு சிலை - நீண்டவில்லையுடைய, துரோணன் மைந்தன் - துரோணனது புத்திரனான அசுவத்தாமன், விரை தொடை கிருதனோடும் - நறுமணத்தையுடைய பூமாலையைத் தரித்த கிருதவர்மாவினுடனும், மாதுலனோடும் - தன்மாமனான கிருபாசாரியனுடனும், மீண்டான் - திரும்பிச்சென்றான்; (எ - று.) எண்ணிமீண்டா னென இயையும். (123) 124.-இனிப் பாண்டவர்செய்தி கூறுவார்:- பாண்டவர் துரியோதனன் சென்றவிடத்தை யறியாமை. மற்றவர்மீண்டபின்னர்மாதவக்குந்தியீன்ற கொற்றவர்தாமுஞ்சேனைக்குழாத்தொடுந்தங்களோடும் செற்றவர்தம்மையெல்லாஞ்சேணுலகேறவேற்றிப் பொற்றவரிராசராசன்புக்குழியறிவுறாமல். |
|