கவியில்"மிருகமாக்கள்" எனவருதல் காண்க. மீண்டோர்-பெயர். ஆநிலன் -அநிலன் மகன். (125) 126.-துரியோதனன் செய்தியைவேடர்கள் வீமனுக்குக் கூறல். துவமிகுமுனிவரோடுசுரர்களுந்தோயுநன்னீர்த் தவமுயல்பொய்கைதன்னிற்றண்டுடைக்கையனாகிப் புவிமுழுதாண்டவேந்தன்புக்கனன்கண்டோமென்றார் கவலையின்மனத்தனானகாற்றருள்கூற்றானாற்கே. |
(இ -ள்.) கவலையின் மனத்தன் ஆன - (தனக்குப் பழம்பகைவனான துரியோதனனுள்ளவிடம் தெரியவில்லையேயென்று) கவலையையுடைய மனத்தையுடையவனாகிய, காற்று அருள் கூற்று அனாற்கு - வாயுவினாற் பெறப்பட்ட யமன்போன்ற வீமனுக்கு, (அவ்வேடர்கள்), 'துவம் மிகு முனிவரோடு - சத்துவகுணம் மிக்க முனிவர்களும், சுரர்களும் - தேவர்களும்,தோயும் - நீராடப்பெற்ற, நல் நீர் - புண்ணிய தீர்த்தத்தையுடைய, தவம் முயல்பொய்கைதன்னில் - தவஞ்செய்தற்குரிய தடாகத்தில், புவி முழுது ஆண்டவேந்தன் - பூமி முழுவதையும் அரசாண்ட துரியோதனராசன், தண்டு உடைகையன் ஆகி - கதாயுதத்தையுடைய கையையுடையவனாய், புக்கனன்-பிரவேசித்தான்: கண்டோம் - (நாங்கள்) பார்த்தோம்,' என்றார் - என்றுசொன்னார்கள்; (எ - று.) துவம்- சத்துவம் என்பதன் முதற்குறை. ஞானம் அருள் தவம் பொறுமை, வாய்மை, மேன்மை, மௌனம் ஐம்பொறியடக்கல் என்பன, சத்துவகுணவகைகளாம்: (துவம் = த்ருவம், அசையாநிலையென்று பொருள் கூறுதலும் உண்டு.) கவலை இல் எனப்பிரித்து கவலையில்லாதமனத்தை யுடையவனென்று உரைப்பது கீழ்க்கவியோடு மாறுகொளக் கூறலாம். வாயுகுமாரனாதலாலும், பகைவரைத்தவறாதுஅழித்தலில் யமன்போலுதலாலும், வீமனை 'காற்றருள் கூற்றனான்' என்றார்; சூரியனது குமாரனாகவுள்ள யமன் போலவன்றி வீமன் வாயுவினாற் பெறப்பட்ட ஒரு புதிய யமன் போல்வா னென்பதும் தோன்றும். (126) 127.-அச்செய்தியை வீமன்கண்ணன் முதலியோர்க்குக் கூறல். கருமுகிலனையமேனிக்கண்ணனும்பவளமேனித் தருமனுமெவருங்கேட்பத்தாமவேல்வீமன்சொன்னான் பொருமரவுயர்த்தோனின்றோர்பொய்கையிற்புகுந்தானென்று தெருமருமிருகமாக்கள்செப்பினரென்றுகொண்டே. |
(இ -ள்.) கரு முகில் மேனி - காளமேகத்தை யொத்த கரிய திருமேனியையுடைய, கண்ணனும் - கிருஷ்ணபகவானும், பவளம் மேனி - பவழம்போலச் சிவந்த உடம்பையுடைய, தருமனும் - தருமபுத்திரனும், எவரும் -மற்றும் எல்லோரும், கேட்ப-கேட்கும்படி,- |