| |
(1) |
திரவிட மொழிகளெல்லாம், முதற்காலத்தில்,
வேறுபாடின்றி அல்லது வேறுபடுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப்பெற்றமை.
|
| |
(2) |
திரவிட மொழிகட்கெல்லாம் அடிப்படைச்
சொற்றொகுதி பெரும்பாலும் ஒத்திருத்தல். |
| |
(3) |
எல்லாத் திரவிட மொழிகட்கும் இலக்கண
அமைதி ஒன்றாயிருத்தல். |
| |
(4) |
திரவிட மொழிகளுள் ஒவ்வொன்றையும் செவ்வையாய்
அறிய ஏனையவற்றின் அறிவு இன்றியமையாமை. |
| |
(5) |
தெலுங்கு கன்னடம் மலையாளம் முதலிய திரவிட
மொழிகள் ஒவ்வொன்றாய்த் தமிழினின்று பிரிந்துபோனமை வரலாற்றாலும்
மொழிநூலாலும் அறியப்பெறுதல். |
| |
(6) |
தமிழல்லாத பண்டைத் தாய்மொழிகளும் பிற்காலத்துப்
பல்வேறு கிளைமொழிகளாய்ப் பிரிந்து போனமை. |
திரவிடத்தாய்
திரவிட மொழிகட்கெல்லாம் தாய் தமிழே.
இதற்குச் சான்றுகளாவன:
| |
(1) |
தமிழின் தொன்மையும் அது குமரிநாட்டில்
தோன்றியமையும். |
| |
(2) |
தமிழின் ஒலியெளிமை |
| |
(3) |
வடமொழியும் பிற மொழியும் கலவாத் தூய்மையில் தமிழ்
சிறந்திருத்தல். |
| |
(4) |
தமிழின் சொல்வளம். |
| |
(5) |
தமிழின் சொற் செம்மை. |
| |
(6) |
திரவிடத்திற்குச் சிறப்பான இலக்கியம் தமிழிலேயே இருத்தல். |
| |
(7) |
தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்)
திரவிடம் எனத் திரிந்தமை. |
| |
(8) |
கடைச்சங்கக் காலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழே வழங்கியமை. |
தமிழின்
திரவிடத் தாய்மையை, அதனின்று மிகமிகப் பிரிந்து போனதும் பெருநிலத்தில்
வழங்குவதும் திரவிட மொழிகட்குள் பிறங்கித் தோன்றுவதுமான தெலுங்கொன்றன் வாயிலாய் அறியலாம்.
|