களர் - களரி = அவை, கல்வி நாடகம் மல் வில் பயிலும்
அரங்கு, வழக்குமன்றம், தொழில் செய்யும் இடம்.
கள்ள = போல.
|
கள்ள
மதிப்ப வெல்ல வீழ
|
(தொல்.
1235)
|
குள் - குழு - குழம்பு - குழப்பு -
குழப்பம்.
குழவி = திரண்ட அரை கல்.
கூடுதற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும்,
என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.
குழு - குழூஉ.
குழு - குழாம்.
குழு - குழும்பு.
குழு - குழுமு - குழுவு, குழுமு - குழுமல்,
குழுமம்,
குழுவு - குழுவல், குழுமுதல் = கூடுதல்,
குழுவுதல் = கூடுதல், திரளுதல். குழுமு - கழுமு - கழுமல் = மயக்கம், நிறைவு, மிகுதி.
குழு - கெழு - கெழுமு - கெழுவு.
கெழுமுதல் = பொருந்துதல், கெழுவுதல் = பொருந்துதல்,
மயங்குதல், கெழுவு = நட்பு,''கெழுவ'' ஓர் உவமவுருபு
கெழு - கெழி = நட்பு
குழு - குழை = திரண்ட காதணி.
குழு - (குழகு) - கழகு - கழகம் = ஓலக்கம் (Durbar)
,
புலவரவை,
கலை பயிலிடம், படைக்கலம், மல் பயிலிடம், சூதாடுமிடம்.
குள் - (கூள்) - கூடு.
கழகம் என்னும் சொல், கூடுதல் என்னும் பொருள்கொண்ட
குழு என்னும் வேரடியாகப் பிறந்திருத்தலால், பொதுவாகக் கூட்டம் என்றே பொருள்படுவதாகும்.
அது, முதற்கண், சிறந்த கூட்டமாகிய புலவரவைக்குப் பெயரால் வழங்கிற்று.
|
கண்ணு
தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.
|
|
|
என்னும் பரஞ்சோதி
முனிவர் திருவிளையாடற் புராணச் செய்யுளில், ''கழகம்'' புலவரவையைக் குறித்தது. சங்கம் என்னும்
வட சொற்கு நேர் தென்சொல் கழகம் என்பதே.
|