இங்கிலீஷிற்கும் போதிய கால மில்லாது போகின்றது. இவ் விருமொழியும் வல்லார் தமிழ்நாட்டிலும்
மிகமிகச் சிலரே. இங்ஙனமிருக்க இன்னொரு மொழியைக் கூட்டின், ஒருவன் உத்தியோக (25) வயதிற்குமுன்
மும்மொழி பயில எங்ஙன் முடியும்? அந்தக்கரண வலி (உணர்ச்சிவலி, நினைவாற்றல்) யிருப்பினும்
காலங் காணாதே. அரைகுறையாய் மும்மொழி பயில்வதினும் ஒரு சிறிதேனும் நிறைவாக இருமொழி பயிலல்
ஏற்றமன்றோ! பெஸ்கி (வீரமாமுனிவர்), மாக்கசு முல்லர், போப், கால்டு வெல் முதலியோர் பன்மொழி
பயின்றாரேயெனின், அவர்க்கிருந்த அந்தக்கரண வலி அனைவர்க்கு மில்லையே!
இங்கிலீஷிற்குப் பதிலாக இந்தியை வைப்போமெனின் அஃது
எவ்வதும் இயல்வதா? இங்கிலீஷானது இங்கிலீஷ்காரரின் உயர்வினால் உலகப் பொதுமொழியா யன்றோ
ஆகிவருகின்றது! உலகில் 1/3 பங்கு ஆங்கில வயம். சர்வதேச சங்கத்தில் ஆங்கிலத் தலைமை. உலக
வாணிகத்திற்கு உயிர்நாடிகளாகவுள்ள வழிகளும் துறைகளும் இங்கிலீஷ்காரருடையன. இங்கிலாந்துபோன்றே
ஏற்றமடைந்துள்ள பிராஞ்சு, செருமனி முதலிய பிற நாடுகளிலும் உண்டிச்சாலை (hotel)
,
நூல்நிலையம் முதலிய பொதுவகங்களில் ஆங்கில மறிந்தவரே அலுவல் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர்.
ஐம்பெருங் கண்டங்களுள் ஒன்றாகிய அமெரிக்காவிற் பெரும்பாலார் தாய்மொழி ஆங்கிலமே. ஆங்கிலரும்
அமெரிக்கரும் புது நிருமாண விஞ்ஞானக் கலையில் தலைசிறந்துள்ளனர். இதுகாலை இந்தியர்க்குத்
தெரியாத விஞ்ஞானக் கலைகளெல்லாம் இங்கிலீஷில் எழுதப்பட்டுள. ''ஆடிக்காற்றில் அம்மியே பறக்கையில்
ஆலிலை எந்த மூலை'' என்றபடி எத்துணையோ இலக்கியப் பெருமையும் மொழித் தலைமையுமுள்ள வடமொழி
தென்மொழி யென்னும் இரு பேரிந்தியத் தாய்மொழிகளே விஞ்ஞானக்கலை நூலின்மையால் இங்கிலீஷிற்கு
எதிர் நில்லாவெனின் இனி ஒரு பெருமையுமில்லாத இந்தி எதிர் நிற்குமா? சூரியனுக்குமுன் மின்மினியும்,
யானைக்கு முன் பூனையும் போல்வதே யன்றோ?
இந்தியினின்றும் தமிழுக்கு வந்ததெல்லாம் நியாயப் பிரகாசம்
போன்ற இரண்டொரு நூன் மொழிபெயர்ப்பே. தருக்கமுறை யிரண்டனுட் சிறந்த வைசேடிகமுறை அகத்தியர்
காலத்தே தமிழிலிருந்ததாகத் தெரிகின்றது. நியாயப் பிரகாசம் போன்ற இரண்டொரு வசன நூல்களை
நீக்குவதினால் தமிழிலக்கியத்திற்கு யாதொரு குறைவுமின்று. தமிழிலக்கியம் என்று சொல்லப்படுவதெல்லாம்
பண்டைச் சங்கநூல்களும் சங்கமருவிய நூல்களுமே. இன்றும் தமிழறிஞரிற் பலர் இந்திநூன் மொழிபெயர்ப்புகளையே
அறிந்திலர்.
இந்தியில் மேலைக் கலைகளையெல்லாம் மொழிபெயர்த்துக்
கொள்வமெனின், அஃது எளிதில் இயல்வதா? எல்லாக் கலைகட்கும் ஏற்ற சொற்கள் இந்தியிலுண்டா?
வடமொழித் துணைகொண்டு மொழி பெயர்த்துவிடினும், இந்திப் பயிற்சி மேனாட்டிற்குப் பயன்படுமா?
இந்தியிற் பயின்று பின்பு ஆங்கிலத்திற் பயில்வோமெனின் ஒருவேலைக்
|