பக்கம் எண் :

இரட
 

தமிழ் மொழி வரலாறு

160

இரட்டைப் பன்மை வடிவங்களான ‘அர்கள்’52 போன்றவற்றின் ஆட்சி மிகுகிறது.

2. 3 எச்சம்

அ. வினையெச்சம் - இறந்தகாலம்

இகர முடிவும் உயிர் மயக்கங்களும் கொண்ட ‘கொளீஇ’ என்பது போன்ற இறந்த காலம் காட்டும் பழைய வடிவங்களின் ஆட்சி குறைகிறது. உடம்படுமெய்களை உடைய வடிவங்கள் அவற்றுக்குப் பதில் வருகின்றன. சான்று: ‘கொளுவி’, ‘போய்’, ‘ஆய்’ என்பவற்றில் மொழியிறுதி இகரம் யகர மெய்யாக வருகிறது. இவை தவிர ஏனையவற்றில் மேலே கூறப்பட்டது போல நிகழ்கிறது.ிறது.ிறது.ிறது.

‘வினாஅய்’53 என்பது ‘வினவி’54 என வந்துள்ளதையும் நோக்குக. உகரத்தில் முடியும் வேர்களுடனேயே இறந்தகாலம் காட்டும் விகுதியான இகரம் வருகிறது.

ஆறாவது வினைவிகற்ப வாய்பாடு நான்காம் பதினோராம் வினைவிகற்ப வாய்பாடாதல்

மிகுதியாக வழங்கும் நான்காம், பதினோராம் வினைவிகற்ப வாய்பாடுகளைப் பிற வினைவிகற்ப வாய்பாடுகளைச் சேர்ந்த வேர்களும் பின்பற்றுகின்றன. ஆறாம் வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்த ‘படு’ என்பது ‘பட்டு’ என்றாகாது, பதினோராம் வினைவிகற்ப வாய்பாட்டில் மிகுதியும் வரும் பிற வினை வடிவத்தைத் தருகிறது. சான்று : படுத்து55. இங்ஙனமே ஆறாம் வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்த ‘புகு’ என்பது ‘புக்க’ என்றாகாது. நான்காம் வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்ததைப் போல ‘புகுந்த’56 என்றாகிறது.


52. திருக்குறள் 919

“வரைவிலா மாணிழையார் மென்தோல் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு”.

53. அகநானூறு, 82, 12

“செருகச் செய் யானை செல் நெறி வினாஅய்”.

54. அகநானூறு, 56, 14

“வினவி நிற்றந்தோனே”.

55. அகநானூறு, 56, 4

“வரி அதன் படுத்த சேக்கை”.

56. புறநானூறு, 30, 13

. . .“புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்”. . .