பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு
25
சில கிளை மொழிகளில் காணப்படும் ஒலியன்கள் மூலத்திராவிட மொழியில் இல்லாதிருக்கலாம். (சான்றாகப் பின் இதழ்விரி உயிரும் குரல்வளை வெடிப்பொலியும் இன்றைய தமிழிலும் கூய் மொழியிலும் ஒலியன்களாகும்.) பல்வேறு திராவிட மொழிகளில் காணப்படும் வடிவங்களை முறையாக ஒப்பிடும் பணி இப்பொழுது தான் தொடங்கி உள்ளது. “திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி” விரிவான இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு உதவும். அதன் விளைவாக மூல மொழிக்கும் சேய்மொழிகளுக்கும் இடையிலுள்ள உறவுபற்றிய விரிவான செய்திகள் தெரியவரலாம்.
உயிர்கள்
 
இ, ஈ    உ, ஊ
எ, ஏ   ஒ, ஓ
  அ, ஆ  
 
மெய்யொலிகள்
 
க்-13 ச்-         த்-   ப்-
-க்- -ச்- -ட்- -ற்-   -த்-      
-க்க்- -ச்ச்- -ட்ட்- -ற்ற்-   -த்த்-   -ப்ப்-  
-ங்க்- -ஞ்ச்- -ண்ட்- -ன்ற்-   -ந்த்-   -ம்ப்-  
  ஞ் -ண்-;-ண் ன்       ம்*  
  ய்         வ்    
    -ழ்-;-ழ்   -ர்-     -வ்வ்-  
    -ள்-;-ள்   -ல்-;-ல்        
    -ள்ள்-   -ல்ல்-        
 

ஈரிதழ் வெடிப்பொலி, நுனிநாப் பல் வெடிப்பொலி, நுனிநா நுனியண்ண வெடிப்பொலி, நாவளை வெடிப்பொலி, இடைநா இடையண்ண வெடிப்பொலி, கடைநா கடையண்ண வெடிப்பொலி ஆகிய ஆறு ஒலிப்பிலா வெடிப்பொலியன்களை மூலத் திராவிட மொழியில் எமனோ அமைத்துக் காட்டியுள்ளார். ஈரிதழ் மூக்கொலி, நுனிநாப்பல் அல்லது நுனிநா நுனியண்ண மூக்கொலி, நாவளை மூக்கொலி முதலிய மூன்று மூக்கொலியன்களே மூலத் திராவிட மொழியில் இருந்ததாக எமனோ கருதுகிறார். பர்ரோ கருதுவது


13.   ‘க்-’= மொழி முதல் ககர மெய்
      ‘-க்-’= மொழி இடை ககர மெய்
      ‘-ள்-’= மொழி இறுதி ளகர மெய்.
*   முன்னும் பின்னும் கோடு இடம் பெறாதவை மூவிடத்தும் வரும்.