பக்கம் எண் :

டச
 

தமிழ் மொழி வரலாறு

263

டச்சு மொழி

டச்சுக்காரர்கள் தங்களது கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவுடன் வணிகம் புரிந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கூடலூரில் அவர்களது தூய டேவிட் கோட்டை இருந்தது. ‘கக்கூசு’ என்னும் சொல்லானது ‘kakhuis’ என்னும் சொல்லிலிருந்து வந்ததாகும். வெட்ட வெளியையோ, அல்லது புதர்களையோ மலம் கழிக்கப் பயன்படுத்தி வந்த இந்தியர்களுக்கு இது தெரியாத ஒன்றாகும். ‘துட்டு’ என்ற சொல் சிறிய டச்சு நாணயத்தின் பெயரான ‘duit’ என்பதிலிருந்து வந்ததாகும். டச்சுக்காரர்களின் பணியாளர்கள் பணத்துக்கு இச்சொல்லையே பொதுவாகப் பயன்படுத்தும் அளவுக்கு ஏழைகளாயிருந்திருக்க வேண்டும். ‘துட்டுக்காரன்’ என்னும் சொல்லை நோக்குக.

பிரெஞ்சு மொழி

தங்களது கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக வாணிகம் செய்யப் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தனர். ஆங்கிலேயரின் கடற்படை வலிமையாலும் பிரெஞ்சு அரசின் பாராமுகத்தாலும் டியூப்ளேக்ஸின் (Dupleix) பிரெஞ்சு அரசை இந்தியாவில் நிறுவும் முயற்சி தோல்வியுற்றது. பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியாவின் தலைமையிடமானது. 300 ஆண்டுகாலப் பிரெஞ்சு ஆட்சியின் விளைவாகப் பாண்டிச்சேரி இன்றும் பிரெஞ்சு நாகரிகத்தின் இருப்பிடமாக உள்ளது.

பிரெஞ்சு - தமிழ் உறவின் சுவையான பயன்களில் ஒன்று டியூப்ளேயின் கீழ் பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளை என்பவரின் நாட்குறிப்பாகும். இதில் பல பிரெஞ்சுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மொழியில் பிரெஞ்சுச் செல்வாக்கின் சுவடுகள் காணப்படுகின்றன. இக்கண்ணோட்டத்தில் இந்நூல் ஆராயப்படவில்லை. பாண்டிச்சேரித் தமிழ்க் கிளை மொழியில் பல பிரெஞ்சுச் சொற்கள் காணப்படுகின்றன.

பிறவிடங்களிலும் பிரெஞ்சுச் சொற்கள் தமிழாக்கப்பட்டுள்ளன. ‘பத்தாய்’ >(bouteille) என்பதை வேற்று மொழிச் சொல் என்றே இன்று உணர முடியாது. பாட்டில் அல்லது போத்தல் என்பது ‘bouteille’ என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து வந்ததாகும்.

சீட்டாட்டம் மேற்கத்தியர்களால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. சீட்டுக்களில் உள்ள ‘ஆசு’ என்பது ‘ace’ என்ற