|
தமிழ் மொழி வரலாறு 41
‘அவ்’ அல்லது ‘அ’ அல்லது ‘க’
(க் + அ) ஆகியவற்றில் முடியும் பல வடிவங்கள் உள்ளன. இவை தொழிற் பெயர் விகுதிகளாக,
பின்னர் கருதப்பட்டன. இவ்வடிவங்கள் வியங்கோள் வினையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
தொல்காப்பியர், வியங்கோள் வினை படர்க்கைக்கே வரும் என்கிறார். ஆனால் பழைய
வடிவங்கள், தொல்காப்பியர் காலத்திய இலக்கிய மொழியில் படர்க்கைக்கு மட்டும்
வழங்கியதாலேயே இவ்விதி வந்தது.18
வேறொரு கிளைமொழியில் இக்கட்டுப்பாடு இல்லாது இருந்திருக்கலாம். பின்னர் இதுவே இலக்கிய
மொழியிலும் புகுந்திருக்கலாம் என நம்புவதற்கு இடம் இருக்கிறது. எனவே தொல்காப்பியரின்
இக்கட்டுப்பாடு வழக்கிழந்து போயிற்று. ‘அல்’ விகுதியுடைய வடிவங்கள் மீது மற்றொரு
கட்டுப்பாடும் உண்டு. அது தன்மை ஒருமையில் எதிர் காலத்திற்கு மட்டுமே வரும். இவ்வடிவம்
‘செய்வல்’ எனும் வாய்பாடாகும்.19
இந்த ‘அல்’ விகுதியும் தொழிற் பெயர்களின் விகுதியும் ஒலியன் நிலையில் ஒன்றாகவே
உள்ளன.
காலம் காட்டுவது மறைந்ததா?
மேலே கூறப்பட்ட எல்லா வடிவங்களும் ஆரம்பத்தில் காலம் காட்டின;
வினை முற்றாக்கப்பட்ட துணை வினையுடன் ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் வரக்
காலங்காட்டும் தன்மை இழப்புறுவதுபோல, பின்னர்க் காலங்காட்டும் தன்மையும் இழப்புற்றது என
வாதிடவும் வழியுண்டு. ‘வந்து விடுவாய்’ என்பது உறுதியைக் குறிக்கும் எதிர்கால வடிவமாகும்.
‘விடுவாய்’ என்பது உறுதியைக் குறிக்கச் சேர்க்கப்பட்டுள்ள துணை வினையாகும். ‘வந்து’ என்ற
வினையில் ‘வா’ என்ற வேரைத் தவிர வேறொன்றும் இல்லை. அது இறந்த காலத்தைக் குறிக்க
முடியாது. ஏனெனில் முழுச் சொல்லும் எதிர்காலத்தைக் குறிக்கிறது. ‘வந்து விடு’ எனும் கூட்டு
வேர் ஏவலைக் குறிக்கப்பயன்படும். இது போல, மேலே கூறப்பட்ட வடிவங்கள் ஒரு காலத்தில்
தாம் பெற்றிருந்த காலங்காட்டும் தன்மையை இழந்ததற்கான காரணங்களைக் கூறுவது
|
18.
தொல்காப்பியம் 711ஆவது நூற்பா
“அவற்றுள்
முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும்
மன்னா தாகும்
வியங்கோட் கிளவி”
19.
தொல்காப்பியச் சேனாவரையர் உரை; 618 ஆவது நூற்பா.
|
|