|
தமிழ் மொழி வரலாறு 60
துக்கு ஏற்புடையதே.
இதைப்போலப் பலர்பால் விகுதியான ‘ஓர்’ என்பதன் மூலவடிவம் ‘ஆ அர்’ எனலாம். ஆனால்
அவ்வடிவம் வரவில்லை எனினும் ‘ஆர்’ வழங்குகிறது (ஓர்
~ ஆ அர் ~ ஆர்). அவை தெரிநிலை
வினையாலணையும் பெயராயிருக்கக் கூடும்.
4 ஒலிமாற்றம்: மொழி
இறுதி மூக்கொலி இழக்கப்படுதல்
சில சொற்களில் மொழி
இறுதி மூக்கொலி கேட்கப்படாமலிருக்கும் போக்கிருப்பதால் அது குறிக்கப் பெறுவதில்லை.
குறிப்பாக மொழி இறுதி மூக்கொலிக்கு முன்னர் நெட்டுயிர் வரும் பொழுது இங்ஙனம் ஏற்படுகிறது.
சான்று: ‘செய்தான் ~ செய்தா’. மொழியிறுதி
மூக்கொலி மறைந்தபின் அதற்கு முந்திய உயிர் மூக்கொலிச் சாயல் பெறுவது காரணமாகலாம்.
அல்லது எழுதுவோன் செய்த பிழைகளாலும் நேர்ந்திருக்கலாம்.
கட்டுருபான (
Bound
Forms) அடைசொல் (
Attribute) வெடிப்பொலிக்கு முன்னர் வருமாயின் மூக்கொலி முடிவைப் பெற்றுக் காணப்படுகிறது. ஆனால் இது
எல்லா இடங்களிலும் இவ்வாறு குறிக்கப்பெறவில்லை. சான்று: நெடு
~ நெடுN
(
N = மூக்கினமெய்) (மெய்) உயிர்மெய்
மூக்கொலி ~ (மெய்) உயிர்மெய் உயிர்.
மூக்கொலி > மருங்கொலி
இலக்கிய மொழியை மட்டும் கருத்தில்கொண்டு பார்த்தால்
மொழியில் வரும் நாவளை அல்லது நுனியண்ண மூக்கொலிகள், தொல்காப்பியருக்குப் பிற்பட்ட
காலத்தில் தமக்கு இணையான மருங்கொலியாக மாறுகின்றன. சங்க காலத்தில் ‘வேண்’ என்பது
‘வேள்’ என்றாகிறது. இந்த மாற்றம் குகைக் கல்வெட்டுக்கால மொழியில் ஏற்படவில்லை.
5 பிறமொழிச் சொற்களைத்
தமிழாக்கல்
சமஸ்கிருதச் சொற்கள்
பிராகிருத வடிவத்தில் வழங்குகின்றன. இவை ஒலியன் அமைப்பை விளக்க உதவுவன. அஃறிணையாயின்
அச்சொல் மகர இறுதியையும் ஆண்பாலாயின் னகர இறுதியையும் பலர்பாலாயின் ரகர இறுதியையும்
பெறுகின்றன.
siddhi>
citti
kancana
> hancanam
kutumbika
> kutimpikan
|