|
தமிழ் மொழி வரலாறு 8
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் எல்லீஸ்,
கால்டுவெல் போன்றோர் எழுதிய சிறந்த நூல்களும் உள்ளன.
ஒலிக்குறியீடுகள் எதுவும் இல்லாத நிலையில்,
இந்நூல்களிலுள்ள உச்சரிப்புப் பற்றிய விளக்கங்களையெல்லாம் புரிந்து கொள்வது கடினமாக
உள்ளது. ஏனையோரது விளக்கங்களைக் காட்டிலும் தமிழ்ப்பாவலரும் அறிஞருமான பெஸ்கியின்
விளக்கங்கள் பின்பற்றத்தக்கன. பெஸ்கி சுட்டிக்காட்டுவது போல இவ்விலக்கணநூல்கள்
சிலவற்றில் நெடில் போன்ற சில முக்கியமான ஒலிக்குறிப்புக்கள் குறிக்கப்படவில்லை.
பெஸ்கி தம் வாழ்வின் பெரும் பகுதிக் காலம் தமிழகத்திலேயே வாழ்ந்தார்.
தமிழகத்திற்குச் சிறிது காலம் வந்து சென்ற பால்தே போன்றோரின் நூல்களைவிட ஹாக்கெட்11
குறிப்பிடுவதுபோல “நீண்டகாலம் மொழியுடன் நேரடியாகத் தொடர்புடைய” பெஸ்கி போன்றோரின்
நூல்கள் நம்பத் தகுந்தன. பேச்சுத்தமிழோடு நெருங்கிய பயிற்சியின்மை காரணமாகவோ அல்லது
தங்களது மறதியின் காரணமாகவோ சில தவறுகள் இந்நூல்களில் காணக் கிடக்கின்றன. சிலர்
தமிழ்ச் சொற்களை வேற்று நெடுங்கணக்கில் எழுதும்பொழுது மயக்கமுற எழுதியுள்ளனர்.12
3. 5 அகராதிகள்
தமிழ்மொழி
வரலாற்றுக்கான அடிப்படைச்சான்றுகளில் ஒன்றாக அகராதிகளையும் குறிப்பிடலாம். நம்முடைய
ஆராய்ச்சியைப் பொறுத்த வரையில், செய்யுள் நடையில் எழுதப்பட்ட பண்டைக் காலத்திய
நிகண்டுகள் என்பன பிற்காலத்தில் போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர்
ஆகியோர் தயாரித்த அகராதிகளைப் போல அவ்வளவாக நமக்கு உதவமாட்டா. போர்ச்சுக்கீசிய
மொழியிலும் தமிழிலும் பெஸ்கி எழுதியுள்ள
|
11.
C F. Hockett
:
“Implications of
Bloomfield’s Algonquian Studies” in
Readings in Linguistics,
p p 283-284,1958.
12.
பிரிழ்கில் (
Pizikryl)
என்பவர் ‘சாகம்’ (cagam)
என்று ‘காகம்’ (kakam) என்பதையும், ‘சை’
(cai)
என்று
‘கை’(kai) என்பதையும் ‘அசம்’
(acham) என்று ஓரிடத்திலும்,
பிறிதொரிடத்தில் ‘அஸ்சம்’
(accham)
என்றும் ‘அச்சம்’ (accam) என்பதை
எழுதியுள்ளார்.
|
|