பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 219 -


           சினம்அடங்கக் கற்றாலும் சித்திஎலாம் பெற்றாலும்
           மனம்அடங்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே.

இவ்வாறே எல்லாக் கண்ணிகளும் உயர்ந்த சமய உண்மைகளை எடுத்துரைப்பவை. மக்களிடையே எவ்வகை வேறுபாடும் கருதாமல், எல்லோரிடத்தும் அன்பு பூண்ட பெருமனம் படைத்தவர் தாயுமானவர். சமயப் போராட்டங்களைக் கடந்து சமரச ஒளி கண்டவர் அவர். அவருடைய பாடல்களில் அத்தகைய ஒளி வீசுவதையும் காணலாம்; இலக்கிய மணம் கமழ்வதையும் உணரலாம்.