பக்கம் எண் :

106

Tamil Virtual University


உச்சரிப்பு விளையாட்டுக்கள்
 

உச்சரிப்புத் திருந்துவதற்காகச் சில வாக்கியங்களை விரைவாகச் சொல்லிப் பழக வேண்டும்.  அவற்றுள் ‘ர’, ‘ற’ கரங்களும், ன, ண கரங்களும், ல, ள, ழ கரங்களும் விரவி வரும்.  விரைவாகவும் சரியாகவும் அவ் வாக்கியங்களைச் சொன்னால் உச்சரிப்பு திருந்தும். 

  ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறுநரி, சிறு நரி முது
கிலே ஒரு பிடி நரை மயிர் (திரும்பத் திரும்ப)
கடலலையிலே ஒரு உரல் உருளுது, பெரளுது
தத்தளிக்குது, தாளம் போடுது
 

சேகரித்தவர்:
S.S போத்தையா

இடம்:
விளாத்திக்குளம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்.