|
அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து
போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது
என்னும் செய்தி தலைச்செங்காடு மூன்றாம் ராஜ ராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று
கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள்
முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள்.
நிலத் தொடர்புடைய ஜாதியார்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார்
முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன், அளவர் முதலியோர்
இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார்,
இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால்
ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன் வந்தால், அடுத்த பிரிவினரைத்
தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள்
இடங்கைப் பிரிவினரோடு சேர்ந்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள்.
இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில்
கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது சுயநல
அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.
கோயில் சாசனங்களின்
முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி,
ஆடுதுறைக்கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கின்றது. “அரசாங்க அதிகாரிகளின்
உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச்சொந்தக்காரர்களும் சேர்ந்து
இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு
கூறுகிறது. இதே போல் இடங்கை வகுப்பர்;
அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள், நாட்டில்
பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு அரசன்
ஆணைக்கிணங்கக்கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலிலாச் சோழமண்டலத்து
78 நாடுகளும்
ஜயங்கொண்ட சோழமண்டலத்து 48000 பூமியும், உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம்
தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும்,
|