பெண்ணாள் படும்
துன்பம்
நோயாளியான ஒருவனுக்கு மணம் பேசி வந்தார்கள். பெண்ணின் தந்தை
பொருளுக்கு ஆசைப்பட்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். திருமணமான சிறிது
காலத்துக்குள் நோயாளி இறந்தான். சவ அடக்கத்துக்குப் பெண்ணின் தந்தை வந்திருக்கிறார்.
கலியாணம் முடிவு செய்யும் காலத்தில் தன் எதிர்பார்ப்பைப் பொருட்படுத்தாத தந்தைக்கு இப்பொழுது
சூடு கொடுக்கிறாள் மகள்.
மதியம் கிளம்பி வரும்
மாய இருட்டுக் கட்டி வரும்
மறிநாட்டு ராஜமன்னன்
மாலை கொண்டு வந்ததும்
வண்டரிச்ச மாலையிண்ணு
வாங்க எறியாமே-நீங்க வளத்த
மயிலாளுக்குச் சூடினதால்
மாலைபடும் தொந்திரவு
இன்னைக்கு மயிலிவாட நேர்ந்ததுவே.
பொழுது கௌம்பி வரும்
பொன்னிருட்டுக் கட்டி வரும்
பொற நாட்டு ராசமன்னர்
பூக்கொண்டு வந்ததும்-நீங்க
புழுவறித்த பூவுண்ணு
புடுங்கி எறியாமே
நீங்க தேடிய
பொண்ணாளுக்குச் சூடினதால்
பூப்படும் தொந்தரவு-உங்களுட
பொண்ணாள் பட நேர்ந்ததுவே.
உதவியவர்
:
செல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம். |
|