பக்கம் எண் :

474

Tamil Virtual University

மாரடிப் பாட்டு-2

‘மாரடித்த கூலி மடிமேலே’ என்பது பழமொழி. (சொலவடை) இறப்பு என்பது இயற்கையின் நியதி என்றாலும் இறந்தோரை எண்ணி, இருப்போர் அழுது புலம்புகின்றனர்.

நரைத்துத் திரைத்து மூப்பெய்தித் தளர்ந்த காலத்தில் வரும் சாவு மகிழ்ச்சியையே அளிக்கிறது. உரிய காலத்தில் வந்த சாவை எண்ணி யாரும் ஒப்பாரி வைப்பதில்லை.

பிணத்தைக் குளிப்பாட்டி அலங்கரித்து சாய்த்து வைத்து பெண்கள் சுற்றியும் நின்று, கூந்தலை உலைத்து விட்டுக் கொண்டு, இறந்தவரது சீர்சிறப்புகளையும், நோய்வாய்ப்பட்டதையும், பிள்ளைகள் பரிவுடன் செய்த உபசரிப்புகளையும், மருத்துவத்தையும்-முடிவில் வந்த இறப்பையும்-பின்னர் நடைபெறும் இறுதிச் சடங்குகளையும் விவரித்துக் கைகளைத் தம் மார்பில் அடித்துப் பாடிக்கொண்டு சுற்றி வருவர். அதில் சோகமயமானதோர் உருக்கமும் அமைதியும் புலப்படும். கேலியும் கிண்டலும் கூட விரவி வருவதுண்டு. கிழடு, கெட்டைகள் இறந்து அங்கு மாரடித்தல் நடைபெறும்போது பார்த்தால் அது ஓர் இழவு வீடு போலத் தோன்றாது. மகிழ்ச்சிகரமான ஒரு மண விழாவைப் போலவே தோன்றும்.

மாரடித்து முடிந்த பின் கடலை, பயிறு, மாவு, பொரி, ஏதாவது தவறாமல் பரிமாறப்படும். இதையே மேற்கண்ட பழமொழி (சொலவடை) சுட்டிக்காட்டுகிறது.

 

 

(குறிப்பு : S.S. போத்தையா)
  *ஆ அ தி இ கயி யிலாசத்தில்
ஆ அ தி மூலம் தன்னிடத்தில்
பாசுபதம் தான் கொடுத்தார்
பரம சிவனை நோக்கி

* அளபெடை கொடுத்து நீட்டி இசைப்பர்.