|
சொகுசான மகராச மக்களுகளெல்லாம்
மழுங்களாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே
மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே
புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன
புண்ணிய மகராச மக்களுகளெல்லாம்
மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம்
எப்பத்தான் நமக்கு காலம் செழிக்குமோ
உப்போ பணத்துக்கு இரண்டு படிவிலை
ஊருக்கிணத்திலே தண்ணியில்லை
நமக்கு எப்பவேகாலம் செழிக்குமென்றால்-துரைக்கு
அப்பவே விண்ணப்பம் போடலா மென்றார். |
வட்டார வழக்கு:
கவுண்டர் - பயிரிடும் சாதியார்
;
கொதவு - ஒத்தி, அடைமானம்.
குறிப்பு:
கடிப்பாராம்
- நல்ல உணவைக் குறை கூறியவர்கள், புண்ணாக்கும் கற்றாழையும் தின்பார்கள்.
உதவியவர்
:
சின்னப்ப கவுண்டர்
சேகரித்தவர்
:
கு. சின்னப்ப பாரதி |
இடம்
:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம். |
|