பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 32 -

    இவர்களிருவரும் ஐம்புலவின்பம் ஆரத்துய்த்து வரும் நாளில் செயவதிக்கு முறையே வியாளன் மகாவியாளன் என்னும் இரட்டைப் புதல்வர்கள் பிறந்தனர்,இருவரும் இனிதே நன்கு வளர்ந்துவரும் நாளில் பல்கலைத் தேர்ச்சி பெற்று அரசர்க்குரிய சிறப்போடு விளங்கினர்.  இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்மலையும் கோடி வீரர்களையும் ஒருங்கே வீழ்க்கும் உடல் வலியும் உள்ளத்திறலுமுடையவராதலால்,‘கோடி படர்கள்‘ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுச் சீருடன் இருக்கும் காலத்தில், ஓர்நாள் அந்தரத்தே அறிவொளிமிக்க கடவுளுக்கு நிகராகிய அருந்தவ முனிவர் தூமசேனர் வந்தருளினார்.  அப்போது வேந்தனாகிய செயவருமன் விரைந்துவந்து அவரடியில் வீழ்ந்து வணங்கி அறவமுதம் ஆரப் பருகியபின், ஊழ்வினையுற அவரைத் தொழுது ஓர் விண்ணப்பஞ் செய்தான். (3)


77. என்னுடையப் புதல்வர் தாமு மினியர சாளு மொன்றோ
  அன்னியன் சேவை யொன்றோ வடிகணீ ரருளிச் செய்மின்
  துன்னிய புதல்வர் தாமு மொருவனைச் சேவை பண்ணும்
  என்றவர் குறியுஞ் சொல்ல யெழின்முடி புதல்வர்க் கீந்தான்.

"முனியரசே! என்னுடைய புதல்வர்கள் இருவரும் இனியொன்று அரசாள்வரோ? அயலாருக்குச் சேவை செய்வார்களோ? இவ்விரண்டிலொன்றைத் தாங்கள் விளக்கியருள வேண்டும்" என, முனிவரும் அவதியாலறிந்து, "அரசே! நின் புதல்வர்கள் இருவரும் அரசாள மாட்டார்கள், ஒருவனிடத்தே சேவை செய்வார்கள். அவற்றை அறிதற்குச் சில அறிகுறிகளும் உண்டு. எவனைக் கண்டவுடன், "எவள் இவனை அழகற்றவன் என்று இகழ்கின்றாளோ, அவள் கணவனுக்கே இவன் சேவை செய்வான். இவற்றைக் கேட்ட வேந்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றவனாய் வியாளனுக்கு முடிசூட்டி மாவியாளனை இளவரசனாக்கினான். (4)

வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்

78. மன்னன்போய் வனம டைந்து மாமுனி யாகி நிற்பப்
  பின்னவ ரமைச்சன் றன்மேற் பெருநிலப் பாரம் வைத்துத்
  தன்னிறை தேடிப் போந்தார் தரைமகட் டிலதம் போலும்
  பன்னக நகர நேராம் பாடலி புரம தாமே.

செயவர்மாவெனும் வேந்தன் அகப்புறப் பற்றறுத்து அடவி ஏகித் துறந்து அருந்தவனாகி நோற்கலானான். அவன் மக்களாகிய வியாளன்